ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் லுட்டீசியம் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட புதிய சூப்பர் கண்டக்டர் உலகையே மாற்றி அமைக்கும் அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மிக அதிக அளவு மின்சாரத்தைக் கடத்தும் திறன் கொண்ட புதிய சூப்பர் கண்டக்டரை (மீக்கடத்தி) அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பினால் ஆற்றல் மற்றும் மின்னணுவியல் துறையில் பெரிய அளவில் மாறக்கூடும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நியூ சையின்டிஸ்ட் (New Scientist) இதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி, நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரங்கா டயஸ் என்ற உதவிப் பேராசிரியரும் அவரது குழுவினரும் இணைந்து ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் லுட்டீசியம் ஆகிய மூன்று தனிமங்களை இணைத்து புதிய தனிமத்தை உருவாக்கியுள்ளனர்.
Surekha Yadav: வந்தே பாரத் ரயிலில் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்
இந்த புதிய தனிமத்துக்கு 'ரெட் மேட்டர்' (Reddmatter) என்று பெயரிட்டுள்ளனர். இது வெறும் 69 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திலும் 1 ஜிகாபாஸ்கல் அழுத்தத்திலும் சூப்பர் கண்டக்டராக செயல்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது வளிமண்டல அழுத்தத்தைவிட கிட்டத்தட்ட 10,000 மடங்கு அதிகம். இருப்பினும் வேறு எந்த மீக்கடத்துத் திறன் கொண்ட பொருளைக் காட்டிலும் மிகவும் குறைவு.
நேச்சர் (Nature) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், மூன்று தனிமங்களை இணைத்து இரண்டு வைரங்களுக்கு இடையே வைத்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்த மீக்கடத்துத் திறன் கொண்ட தனிமத்தை எப்படி உருவாக்கினார்கள் என விவரித்த்துள்ளனர். அழுத்தம் கொடுக்கப்படபோது சேர்க்கப்பட்ட தனிமங்களின் நிறம் சிவப்பு நிறமாக மாறியதால் அதற்கு 'Reddmatter' பெயர் வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
"இந்தப் ரெட் மேட்டர் தனிமத்தின் கண்டுபிடிப்பு வாயிலாக பயன்பாட்டு தொழில்நுட்பத்திற்கு புதிய விடியல் ஏற்பட்டுள்ளது" என்று பேராசிரியர் ரங்கா டயஸ் வர்ணிக்கிறார்.
200 மில்லியன் மெகாவாட் (MWh) மின்சாரத்தை சேமிக்கும் பவர் கிரிட்களை அமைக்கலாம். உராய்வு இல்லாத, லெவிட்டிங் அதிவேக ரயில்களை உருவாக்கலாம். எம்.ஆர்.ஐ. (MRI) மற்றும் மேக்னடோ கார்டியோகிராபி போன்ற மருத்துவப் பரிசோதனைகளை மிகவும் மலிவானதாக மாற்ற முடியும். டிஜிட்டல் மெமரி டிவைஸ் தொழில்நுட்பத்தின் வேகம் மற்றும் திறமையை மேம்படுத்தலாம் என இந்த அதிசய தனிமத்தின் பயன்களை விஞ்ஞானிகள் பட்டியலிடுகிறார்கள்.
இந்த ரெட் மேட்டர் பற்றி ஆய்வறிக்கை மதிப்பு மிக்க நேச்சர் இதழில் வந்திருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை வேறு சில விஞ்ஞானிகள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆய்வில் கூறப்பட்டுள்ள சோதனையை செய்துபார்த்து சோதித்த பின்புதான் டயஸ் குழுவினரின் ஆய்வு பற்றி முடிவுக்கு வரமுடியும் என்று சொல்கிறார்கள்.
உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளவை: ஆய்வில் தகவல்