ஜியோவில் டேட்டா, வாய்ஸ் கால் வசதிகளுடன் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களா? ரூ.500க்கு கீழ் அன்லிமிடேட் டேட்டா, வாய்ஸ்கால்களை வழங்கும் சிறந்த ஜியோ ரீசார்ஜ் பிளான்களின் பட்டியலை இங்குக் காணலாம்..
தொலைத்தொடர்பு சேவையில் நம்பர் ஒன் இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருந்து வருகிறது. பயனர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பலதரப்பட்ட ரீசார்ஜ் பிளான்கள் ஜியோவில் உள்ளன. வருடாந்திர திட்டங்கள், மாதாந்திர திட்டங்கள், குறுகிய கால டேட்டா டாப்-அப்கள் என பல விதமான பிளான்கள் உள்ளன. அவற்றில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் பயனர்களுக்கு, அதுவும் ரூ. 500 பட்ஜெட்டின் கீழான பிளான்களை இங்குக் காணலாம்.
ஜியோ ரூ 119 பிளான்: இந்த திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா லிமிட், அன்லிமிடேட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் JioTV, JioCinema, JioSecurity, JioCloud என ஜியோ சேவைகளைப் பெறலாம்.
ஜியோ ரூ 149 பிளான்: 20 நாட்கள் பேக் வேலிடிட்டியுடன், தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகள் இதில் கிடைக்கின்றன.
ஜியோ ரூ 179 பிளான்: இந்த பேக்கில் 1ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்களுக்கு ஜியோ செயலிகளுக்கான வசதிகள் உள்ளன.
ஜியோ ரூ 199 பிளான்: 23 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த பிளான் வருகிறது. இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் கிடைக்கிறது.
ஜியோ ரூ 209 பிளான்: இத்திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் வசதிகளைப் பெறலாம்.
ஜியோ ரூ 239 பிளான்: இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ 249 பிளான்: இந்த பிளான் 5ஜிக்கான ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வருகிறது. இதில் 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 23 நாட்களுக்கு ஜியோ ஆப்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
ஜியோ ரூ 259 பிளான்: இந்த பிளான் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது, தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ், ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் ஆகியவற்றைப் பெறலாம். தகுதியான ஜியோ பயனர்கள் இந்த செயலில் உள்ள பேக் வேலிடிட்டியின் போது அன்லிமிடேட் 5G டேட்டாவை பெற முடியும்.
ஜியோ ரூ 296 பிளான்: இந்த பிளான் கடந்த ஆண்டு ஜியோ ஃப்ரீடம் திட்டங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 25 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 30 நாட்களுக்கு வழங்குகிறது.
ஜியோ ரூ 299 பிளான்: ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட வகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த விற்பனையான பிளான்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பேக் மூலம் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 28 நாட்கள் பேக் வேலிடிட்டி பெற முடியம்.
ஏர்டெல் தில்லு-முல்லு? வேண்டுமென்றே 4ஜி வேகத்தை குறைக்கிறதா??
ஜியோ ரூ 349 பிளான்: இது ஜியோவின் மற்றொரு சிறந்த விற்பனையான ப்ரீபெய்ட் திட்டமாகும், மேலும் 2.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்களுக்கு ஜியோ ஆப் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ 419 பிளான்: இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள்.
ஜியோ ரூ 479 பிளான்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் தினசரி 1.5 ஜிபி இணைய டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அம்சங்களைப் பெறலாம்.