பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சாம்சங் நிறுவனம் புதிதாக மெயின்டைனன்ஸ் மோட் (Maintenance Mode) என்ற அம்சத்தை கொண்டுள்ளது. இது என்ன அம்சம், இதனால் என்ன பலன் என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஸ்மார்ட்போன் உற்பத்தில் முன்னனி இடத்தில் சாம்சங் இருந்து வருகிறது. தொழில்நுட்ப வரத்தகத்தில் போட்டிகளைச் சமாளிப்பதற்காக பல புதிய அம்சங்களை சாம்சங் அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது UI 5 அல்லது அதற்கு மேல் உள்ள கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு, புதிதாக Maintenance Mode என்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த மெயின்டைன்ஸ் மோடை சாம்சங் கேலக்சி S21 சீரிஸில் ( Galaxy S21 ) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த மோட் கொண்டு வரப்படுகிறது.
undefined
பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை ரிப்பேர் செய்வதற்காக மற்ற கடைகளில் கொடுக்கும்போது அவர்களது தனிப்பட்ட புகைப்படங்கள் , மெசேஜ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை திருடும் அபாயம் உள்ளது. இதனை தடுத்து நிறுத்தி, பயனர்களின் டேட்டாக்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மெயின்டனன்ஸ் மோடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை திருடாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த பிளான் விரைவில் முடிகிறது!
மெயின்டைனன்ஸ் மோடினை ஆன் செய்வது எப்படி?
முதலில் உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும். அதில் பேட்டரி மற்றும் டிவைஸ் கேர் ( Battery and device care ) என்பதை தேர்வு செய்யவும். பிரைவசி பங்ஷன் ( privacy function ) என்பதற்குச் சென்று மெயின்டைனன்ஸ் மோடினை தேர்வு செய்யவும் ( Maintenance Mode ).
இந்த மெயின்டைனன்ஸ் மோடினை உங்கள் ஸ்மார்ட்போனில் முழுமையாக ஆக்டிவேட் செய்ய உங்கள் மொபைலை ரீபூட் செய்யுங்கள் . மேலும் இந்த மெயின்டைனன்ஸ் மோடினை ஆன் செய்வதற்கு முன்பு, உங்கள் கோப்புகளை நீங்கள் பேக் அப் செய்து கொள்ளுமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்துகிறது.
ஏனெனில், ஒரு பயனர் தன் போனில் மெயின்டைன்ஸ் மோடினை ஆக்டிவேட் செய்த உடன் புதியதொரு அக்கவுண்ட் உருவாகிவிடும். இதன் மூலம் அவரது மொபைலை பழுது பார்க்க கொடுக்கும்போது அவரின் தகவல்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
ஒரு மொபைலில் மெயின்டைன்ஸ் மோடை ஆக்டிவேட் செய்த பின் அதன் பயனரால் உருவாக்கப்படும் தகவல், அவர் டவுன்லோட் செய்யும் செயலிகள் அனைத்தும் அகற்றப்படும். எனவே, இந்த மோடை ஆன் செய்வதற்கு முன்பு பேக்அப் செய்துகொள்ளும்படி பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்னது வியர்வையை வைத்து சார்ஜ் பண்ணலாமா ? அட்வான்ஸ் சார்ஜிங் டெக்னிக்