வாட்ஸ் அப்பின் புகைப்படத்தை மங்கலாக்கும் (இமேஜ் ப்ளர்) அம்சம் தற்போது டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது.
வாட்ஸ்அப்பில் இதுவரையில் நீங்கள் இமெஜை அனுப்பும் போது, ஷேர் ஆப்ஷனில் எமோஜிக்கள், ஸ்டிக்கர், டெக்ஸ்ட் மெசேஜ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். எடிட் செய்வதற்கு பென்சில் பட்டனை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது மேற்கண்ட அமசங்களுடன் புதிதாக ப்ளர் (Blur) என்ற அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம் உங்கள் புகைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ப்ளர் ஆப்ஷனை பயன்படுத்தி மங்கலாக்கலாம்.
WaBetaInfo இணையதளத்தில் வெளிவந்த செய்திகளின்படி, வாட்ஸ்அப் புதிதாக மேம்படுத்தப்பட்ட பல அப்டேட்களை சில டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமேஜ் எடிட் செய்வதற்காக இரண்டு கருவிகளை உருவாக்கி உள்ளது. அதனை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் புகைப்படத்தின் குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கிக் கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பின் இந்த ப்ளர் டூல் அப்டேட் முதன் முதலில் இந்த ஆண்டு ஜூன் மாதம் காணப்பட்டது. தற்போது, சில வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்கு இது கிடைக்கிறது. எதிர்காலத்தில் மொபைல் பயனர்களுக்கும் இந்த அம்சம் நீட்டிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்த ப்ளர் டூல் அப்டேட் சில வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. எதிர்காலத்தில் மொபைல் பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
Instagram இல் உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டுமா?
இதேபோல், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.23.15 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் நீங்கள் ஒருவர் செய்த மெசேஜ் அல்லது மீடியாவை மற்றவருக்கு ஃபார்வேர்டு பட்டனை பயன்படுத்தி ஃபார்வேர்டு செய்யும்போது உங்களால் அதற்கேற்ற தலைப்பை கொடுக்க முடியாது.
ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்கள், ஃபார்வேர்டு செய்யப்படும் இமேஜ், வீடியோ, ஆடியோவுக்கு ஒரு தலைப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். இதேபோல்,, GIF கள் மற்றும் ஆவணங்களை அனுப்பும் போதும், அதோடு மெசேஜ் அனுப்பலாம்.
இதில் பயனர்கள் மீடியாவினை ஃபார்வேர்டு செய்யும்போது அந்த மீடியாவிற்கு கீழே ஒரு புதிய மெசேஜ் பாக்ஸைக் காண்பார்கள். அதனைப் பயன்படுத்தி , கோப்பு, இமெசேஜ்க்கு பெயர் கொடுத்து அல்லது ஏதாவது மெசேஜ் டைப் செய்து அனுப்பலாம்.
WhatsApp Auto Reply: அடேங்கப்பா வாட்ஸ்அப்பில் இப்படியெல்லாமா கூட பண்ணலாம்?