மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ஃபைபர் பிராட்பேண்டிலுள்ள இரண்டு அற்புதமான திட்டங்களை விரைவில் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 75 வது சுதந்திர தினத்தன்று புதிதாக இரண்டு திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்தது. தற்போது இதனை நிறுத்த உள்ளதாக பிஎஸ்என்எல் கூறியுள்ளது. எனவே, பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் மூலம் வழங்கப்படும் சேவையை நீங்கள் பெற விரும்பினால் இது தான் அதற்கு சரியான நேரம்.
பிஎஸ்என்எல் விரைவில் நிறுத்த உள்ள பிராட்பேண்ட் திட்டங்களின் விவரம்:
இந்த இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களில் ஒவ்வொன்றின் விலையும் ரூ.275 ஆகும். இரண்டுமே ஒரே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதன் சலுகைகளில் சில மாறுபாடுகள் உள்ளன.
Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்
ஒரு திட்டம் 30 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்கும். மற்றொன்று 60 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிடட் வாய்ஸ் கால் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு திட்டங்களும் 75 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.
மேலே குறிப்பிட்டது போல இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். நவம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டங்களை நிறுத்த உள்ளதாக பிஎஸ்என்எல் கூறி உள்ளது.
நீங்கள் இந்த திட்டங்களை உபயோகிக்க விரும்பினால் நவம்பர் 15 ம் தேதிக்குள் அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்றுமே உங்களால் இதை பயன்படுத்த முடியாது. பிஎஸ்என்எல் இந்த திட்டங்களில் எந்த விதமான OTT தளங்களுக்கும் சலுகை கொடுக்கவில்லை. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையான ஜிஎஸ்டி வரி இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னது வியர்வையை வைத்து சார்ஜ் பண்ணலாமா ? அட்வான்ஸ் சார்ஜிங் டெக்னிக்