கடந்த சில காலமாக புதிய வாட்ஸ்அப் மோசடி ஒன்று இந்திய அளவில் பரவி வருகிறது, வாட்ஸ்அப் பிங்க் மோசடி என்று அழைக்கப்படும் இந்த நூதன மோசடியால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் அரசு மற்றும் காவல் துறையினர் இந்த மோசடிக்கு எதிராக எச்சரித்துள்ளனர்.
"வாட்ஸ்அப் பிங்க்" இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு ரெட் அலர்ட்" என்று வடக்கு பிராந்திய சைபர் போலீஸ் குற்றப்பிரிவின் ட்வீட் எச்சரித்துள்ளது இதற்கு சான்று. சரி இது என்ன? இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
WhatsApp Pink என்றால் என்ன?
WhatsApp Pink என்பது மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்குவதாகக் கூறும் ஒரு பிரபலமான அப்ளிகேஷனின் போலிப் பதிப்பாகும்.
என்ன மோசடி நடக்கிறது?
மோசடி செய்பவர்கள், கூடுதல் அம்சங்கள் கொண்ட இந்த புதிய பிங்க் லுக் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்யுமாறு பயனர்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த வாட்ஸ்அப் பிங்கைப் பதிவிறக்கம் செய்யும் நபர்களின் போன்களை ஹேக் செய்ய இது மோசடி நபர்களுக்கு உதவுகிறது என்று தான கூறவேண்டும். இதன் மூலம் வங்கி விவரங்கள், கான்டக்ட்ஸ், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பல முக்கியமான தகவல்கள் திருடப்படலாம்.
குட்டி சந்திரயான் 3 - இந்திய பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கிய தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல்!
ஹேக்கர்கள் அனுப்பும் மெசேஜ் எப்படி இருக்கும்?
"புதிய பிங்க் வாட்ஸ்அப், கூடுதல் அம்சங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை ட்ரை செய்து பார்க்கவும், என்று செய்தி ஹாக்கர்களிடம் இருந்து மெசேஜ் வருகின்றது. அதேபோல இப்பொது "வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக பிங்க் வாட்ஸ்அப்பை கூடுதல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே பிங்க் நிறத்தில் உங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்றும் மெசேஜ் வருகின்றது.
இது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்ட உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறவினர்கள் எண்ணிலிருந்து கூட இந்த பிங்க் whatsapp குறித்து செய்திகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் ஏற்படும் பாதகம் என்ன?
முதலில் உங்கள் போன் முழுமையாக ஹேக் செய்யப்படும், உங்களுக்கு வரும் முக்கியமான OTP உள்பட அனைத்து தனிப்பட்ட தரவுகளும் திருடப்படும். உங்கள் புகைப்படங்களை திருடி, அதன் மூலம் உங்களை பிளாக் மெயில் செய்யவும் வாய்ப்புகள் உண்டு, உங்கள் அலைபேசியோடு இணைக்கப்பட்டிருக்கும் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் திருடப்படலம்.
ஏன் இது ஆண்ட்ராய்டு யூசர்களை மட்டும் பாதிக்கிறது.
காரணம் அண்ட்ராய்டு போல 3rd பார்ட்டி தரவுகளை டவுன்லோட் செய்ய ஆப்பிள் வழங்கும் iOS அனுமதிப்பதில்லை.
சரி தெரியாமல் ஏற்கனே இதை டவுன்லோட் செய்திருந்தால் என்ன செய்வது?
தவறாக இதை டவுன்லோட் செய்தவர்கள், உடனடியாக இதை டெலீட் செய்துவிட்டு, உங்கள் போனில் இருந்து உங்களுக்கு தேவையான தரவுகளை Backup எடுத்துக்கொண்டு உங்கள் போனை முற்றிலும் format செய்துவிட வேண்டும். அப்போது தான் ரகசியமாக உங்கள் போனில் டவுன்லோட் செய்யப்பட்ட ஹாக்கிங் ஆப்ஸ் டெலீட் செய்யப்படும்.
ஆகவே முறையாக உங்கள் ஆண்ட்ராய்டு Play Storeல் உள்ள செயலிகளை மட்டும் பயன்படுத்தி உங்கள் தரவுகளை பாத்திரமாக பாதுகாக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.