உஷார் ...! பறந்து கொண்டிருந்தவிமானத்தில் ஹெட்போன் வெடித்தது....

 |  First Published Mar 15, 2017, 7:00 PM IST
headphone caught fire in flight



உஷார் ...! பறந்து கொண்டிருந்தவிமானத்தில் ஹெட்போன் வெடித்தது....

சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட நிறுவன மொபைல், தீப்பற்றி எரிவதாகவும், சில சமயத்தில் வெடித்து சிதறுவதாகவும் புகார் எழுந்தது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் பீஜிங்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில்,ஒரு பெண் ஹெட்போனில் பாட்டு கேட்டிருந்த போது திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்பெண்ணின்  முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து  இரும்பிய படியே பயணம் செய்துள்ளனர்  மற்ற பயணிகள். ஹெட்போன் தீப்பிடித்து எரிந்ததற்கு காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியாலேயே என  தெரிய வந்துள்ளது .

இந்த தகவலை ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உறுதி  படுத்தியுள்ளது .

எனவே விமானத்தில் மட்டுமில்ல,நாம் எங்கிருந்தாலும் ஹெட்போன் பயன்படுத்தும் போதும் சரி, அதிக நேரம் போன் பேசும் போதும் சரி  இது போன்ற  அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்  உள்ளது  என்பதால் , கவனமாக  இருப்பது  நல்லது

click me!