கடலில் மிதக்கும் சொகுசு ஓட்டல் ..மும்பை மக்கள் உற்சாகம் .....
மும்பையில் முதன் முதலாக மிதக்கும் ஓட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடலின் அழகை ரசித்தப்படியே இந்த ஓட்டலில் அமர்ந்து சாப்பிடலாம்.
எங்கு நிறுத்தப்பட்டுள்ளது ?
மும்பை கடலோர பகுதியான பந்த்ரா- வொர்லி கடற்பகுதியை இணைக்கும் இடத்தின் அருகே இந்த கப்பல் நிறுப்பட்டுள்ளது. இந்த கப்பலை டபிள்யூபி இண்டர்நேஷ்னல் கன்சல்டன்ட்ஸ் என்கிற நிறுவனம் இயக்குகிறது. இந்த கப்பல் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
undefined
இந்த கப்பலில் சுமார் 660 பயணிகள் வரை உள்ளே அமரலாம். 3 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில்
24 மணி நேர காபி ஷாப், கிளப் வசதி என அனைத்தும் இந்த மிதக்கும் கப்பலில் உள்ளது . சொல்லப்போனால் நாம் வாழும் வாழ்வில் ஒரு முறையாவது இந்த மிதக்கும் கப்பலில் ஒரு கப் காபியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை, இந்த கப்பலை பார்த்த அனைவருக்கும் இருக்கும்
தற்போது இந்தியாவில் கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மிதக்கும் ஓட்டல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .