ஜியோ உடனான போட்டியை சமாளிக்க பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு சலுகையை தொடர்ந்து வழங்கி வந்தாலும், ஏர்டெல் நிறுவனம் நேரடியாக ஜியோவுக்கு போட்டியாக பல சிறப்பு சலுகையை அறிவித்து வருகிறது
இந்நிலையில் தற்போது தங்கள் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
எப்படி பெறுவது ?
4ஜி டேட்டாவை இலவசமாக பெறுவது குறித்த ஒரு விளம்பர ஆப்ஷன் MyAritel செயலியில் இருக்கும்.இந்த விளம்பர ஆப்ஷனை கிளிக் செய்தாலே போதும், இலவச 4ஜி டேட்டா நமக்கு கிடைக்கும். அதாவது 30 ஜிபி வரை இலவச டேட்டா பயன்படுத்திக்கொள்ள முடியும் .இதற்கான கால அவகாசம் 3 மாதம் .அதே வேளையில் மாதத்திற்கு 10 ஜிபி டேட்டா வீதம்,மூன்று மாதத்திற்கு 30 ஜிபி டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம்.
undefined
மாதத்திற்கு 1௦ ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
உறுதிப்படுத்திக்கொள்வது எப்படி ?
MyAritel செயலியில் உள்ள விளம்பர ஆப்ஷனை கிளிக் செய்த பின்னர் , ப்ரீ டேட்டா தொடர்பான ஒரு எஸ்எம்ஸ் நம் மொபைல் நம்பருக்கு வரும் .அதனை உறுதி செய்த பின்னர் ப்ரீ டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது .