ஜியோ ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு கொண்டே இருக்கிறது . அதன் ஒரு பகுதியாக தற்போது மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ தற்போது கூகிள் நிறுவனத்தோடு இணைந்து 4ஜி ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே, ரிலையன்ஸ் ரீடெயில் சீன நிறுவனங்களுடன் இணைந்து 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது பாக்ஸ்கான் நிறுவனம் ZTE, CK டெலிகாம், விங்டெக் மற்றும் டினோ மொபைல் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து உதிரி பாகங்களை வாங்க ஜியோ திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், கூகுள் பிரான்டிங் மூலமாக ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலை ஸ்மார்ட்போன் வெளிவந்தால் விற்பனை அமோகமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ பீச்சர் போன்களில், அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
ஏற்கனவே ஜியோ சிம் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தன் பக்கம் இருக்கும் போது , ரிலையன்ஸ் ஜியோ வெளியிடும் மலிவு விலை ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது என நம்பப்படுகிறது .