
பிரபல கார் நிறுவனமான மாருதி , அதனுடைய எந்த மாடல் காரும் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில், புதிய பல பாதுகாப்பு அம்சங்களுடனும், பார்க்கும் போதே கண்ணை கவரும் விதமாக புதிய பொலிவுடன் வெளிவருகிறது மாருதி ஆல்டோ 800
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைப்பெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ-வில் தனது புதிய மாடல் ஆல்டோ800-ஐ அறிமுகப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது .
இந்த கார் ஏற்கனவே , தற்போது மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது .
சிறப்பம்சங்கள் :
ஆல்டோ 800-ல் மீடியா என்ஏவி இன்போடெயின்மென்ட் ஆடியோ சிஸ்டம் வைக்கப் பட்டுள்ளது .இந்த காரை பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்
மற்ற சிறப்பம்சங்கள் :
ஏபிஎஸ் எனப்படும் பிரேக்கிங் சிஸ்டம்,
இரண்டு உயிர் காக்கும் ஏர் பேக்
குறிப்பாக இரண்டு கதவுகள் மட்டுமே இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.இந்த காரை பொறுத்தவரையில் 4 பேர் பயணம் செய்ய முடியும்
ஏற்கனவே மாருதி ஆல்டோ 800, மக்களிடேயே நல்ல வரவேற்பில் உள்ளபோது, இந்த கார் மக்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.