வானிலை செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. எப் 14 ராக்கெட்

By SG Balan  |  First Published Feb 17, 2024, 7:46 AM IST

இஸ்ரோ வடிவமைத்துள்ள 'இன்சாட்-3டிஎஸ்' என்ற வானிலை செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.


'இன்சாட்-3டிஎஸ்' (INSAT-3DS) என்ற வானிலை செயற்கைகோளைத் தாங்கிய ஜி.எஸ்.எல்.வி. எப்-14 (GSLV F-14) ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ள 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 27½ மணிநேர கவுண்ட்டவுன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி 5 நிமிடத்தில் ஆரம்பமானது.

ஏ.டி.எம். போகவே தேவையில்ல... விர்சுவல் ஏ.டி.எம். மூலம் ஈஸியா பணத்தை எடுப்பது எப்படி?

INSAT-3DS செயற்கைகோளைத் தாங்கிச் செல்லும் GSLV-F14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளை உள்ளடக்கியது. ராக்கெட்டின் முதல் நிலையில் 139 டன் உந்துசக்தி கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இருக்கிறது. அதோடு 4 உந்துசக்தி நிலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 40 டன் திரவ உந்துசக்தி உள்ளது.

இரண்டாவது நிலையில் 40 டன் உந்து சக்தி கொண்ட எந்திரம் உள்ளது. மூன்றாவது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் எஞ்சின் உள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்டு கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 6 முறை எதிர்பார்த்தபடி செயல்படாமல் போயிருக்கிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி விண்ணில் விண்ணில் ஏவப்பட்டபோது வெற்றிகரமானதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி விண்ணில் செலுத்தியபோது தோல்வியடைந்தது.

ஒன்பிளஸ் 11R மொபைலுக்கு பெஸ்டு டீல்! ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இவ்ளோ கம்மியா கிடைக்காது!

click me!