Gpay, PhonePe வேலை செய்யவில்லையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

By Dinesh TGFirst Published Jan 2, 2023, 6:02 PM IST
Highlights

Gpay, PhonePe மூலம் பணம் அனுப்ப முடியவில்லையா? வேறு எந்த செயலியும் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இதை மட்டும் முயற்சி செய்து பாருங்கள் போதும்.

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய புள்ளியாக மாறி வருகிறது. சாலையோர வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் வாங்குவது முதல் மின்சார கட்டணம் செலுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது வரை UPI செயலிகள் மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. UPI வந்த பிறகு சில்லறை தொல்லை, அடிக்கடி ஏடிஎம் போகும் தொல்லை குறைந்துவிட்டது.

Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI செயலிகள் தொந்தரவில்லாத பணப் பரிமாற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்பானவை ஆகவும், நாம் எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறோம் என்பதை கண்காணிப்பது போன்ற பல அம்சங்களையும் வழங்குகின்றன. ஆனால் இந்த வழக்கமான செயலிகள் சில நேரங்களில் சர்வர் நின்றுபோவதால் நீங்கள் அனுப்பும் பணம் போகாமல் இருக்கும். 

அவ்வாறு கடைசி நிமிடத்தில் உங்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டால் என்ன செய்வது? அல்லது உங்கள் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்று வந்தால் என்ன செய்வது? அப்படியே அப்டேட் கொடுத்தும் சரியாகாமல் போகலாம்.  இப்படியான சூழலில் நீங்கள் UPI வழியில் பணம் செலுத்துவதற்கு மற்றொரு ஆப் உள்ளது, அதுவும் டவுன்லோட் இன்ஸ்ட்டால் செய்யத் தேவையில்லை. அதுதான் வாட்ஸ்அப். ஆம், WhatsApp Payments எனப்படும் WhatsApp UPI பரிமாற்ற அம்சம் மூலம் இந்த சிக்கலை சரிசெய்யலாம்.

வாட்ஸ்அப் வழி பணப்பரிமாற்றம் என்ற அம்சம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பயனர்கள் ஒரு மெசேஜை அனுப்பும் அதே செயலியில் பணத்தையும் அனுப்பலாம். மொபைல் எண்னை எண்டர் செய்து அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதாகப் பணத்தை அனுப்பலாம். 

வாட்ஸ்அப் பேமெண்ட் ஆன் செய்வது எப்படி?

படி 1: உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் WhatsApp செயலியைத் திறக்கவும்.
படி 2: இப்போது நீங்கள் பணத்தை மாற்ற விரும்பும் நபரின் வாட்ஸ்அப் மெசேஜை திறக்கவும். மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது "உங்கள் கட்டண முறையைச் சேர்" என்பதைத் தட்டவும், பின்னர் "வங்கி கணக்கைச் சேர்" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 5: அடுத்து, உங்கள் தொலைபேசி எண்னை வாட்ஸ்அப்பில் உறுதிசெய்ய வேண்டும். குறிப்பிடத்தக்க வகையில், உங்கள் போனில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும். உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால், வாட்ஸ்அப் செயலி  தானாகவே அதைச் உறுதிசெய்யும்.
படி 6: இப்போது உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேர்க்கவும்.
படி 7: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் WhatsAppக்கு அனுமதி வழங்கவும்
படி 7: தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, ​​வாட்ஸ்அப் UPI தளத்தில் உங்கள் வங்கி இணைக்கப்பட்டுள்ளது.

Google Voice அம்சத்தில் புதிய அப்டேட்! இனி ஸ்பேம் கால்களை எளிதில் கண்டறியலாம்!

வாட்ஸ்அப் UPI பேமென்ட் மூலம் பணம் அனுப்புவது எப்படி?

படி 1: நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் மெசேஜை திறக்கவும் அல்லது மூன்று-புள்ளி பட்டனிலிருந்து நேரடியாக பேமெண்ட்டுகளைத் திறக்கவும்.
படி 2: எண் அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தி கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: இப்போது நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
படி 4: பதிவுசெய்யப்பட்ட வங்கிக்கான உங்கள் UPI பின் செட்டை உள்ளிட்டு, பணம் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். அவ்வளவு தான். 
 

click me!