கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஹோம் செயலியில் வீட்டில் தொலைக்காட்சியை இயக்குவதற்குத் தேவையான முழு கட்டுப்பாடுகளையும் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
9To5Google தளத்தில் தற்போது கூகுள் ஹோம் குறித்த சில விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, ஹோம் சப்போர்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றுடன் டிவிகளை வைத்திருக்கும் பல பயனர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. அது என்னவென்றால், கூகுள் ஹோம் ஆப்ஸில் வீட்டில் தொலைக்காட்சியை இயக்குவதற்குத் தேவையான முழு கட்டுப்பாடுகளையும் கொண்டு வரப்பட உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வெளிவந்த பிறகு, வால்யூம் கூட்டுதல்/குறைத்தல், அன்/மியூட், பவர் ஆன்/ஆஃப், ப்ளே பாஸ் என பல்வேறு விஷயங்களை பயனர்கள் எளிதில் கண்ட்ரோல் செய்யலாம்.
இதற்கு முன்பு, இந்தக் கட்டுப்பாடுகளை Nest Hubல் மட்டுமே பார்க்க முடியும். மேலும், இந்த மேம்பாடானது ‘காஸ்ட்’ இருக்கும் டிவி அல்லது ஆண்ட்ராய்டு டிவியிலிருந்து வேறுபட்டது என்று கூறப்படுகிறது. அதாவது, இவை லேட்டஸ்ட் கூகுள் ஹோம் ஆப்ஸின் மீடியா கண்ட்ரோலால் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், கூகுள் பிரவுசரில் ஜிமெயிலுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
தற்போது பீட்டா பதிப்பில், பயனர்கள் உங்கள் டொமைன் உள்ளேயும், டொமைனுக்கு வெளியேயும் என்கிரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியும். கூகுளின் புதிய தகவல்படி, இன்லைன் படங்கள் உட்பட மின்னஞ்சலின் எந்தவொரு பகுதிகளும், இணைப்புகளும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். க்ளையன்ட் சைட் என்க்ரிப்ஷனானது தற்போது Google Drive, Docs, Sheets, Slides, Google Meet மற்றும் Google Calendar (பீட்டா) ஆகியவற்றில் இப்போது கிடைக்கிறது.
Google Voice அம்சத்தில் புதிய அப்டேட்! இனி ஸ்பேம் கால்களை எளிதில் கண்டறியலாம்!
Google Workspace Enterprise Plus, Education Plus அல்லது Education Standard ஆகியவற்றைக் கொண்ட வாடிக்கையாளர்கள் Gmail கிளையன்ட் சைட் என்க்ரிப்ஷன் (CSE) பீட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பீட்டா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2023 வரை பெறப்படும். பயனர்கள் Gmail CSE பீட்டா சோதனை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில், மின்னஞ்சல் முகவரி, ப்ராஜெக்ட் ஐடி மற்றும் சோதனைக் குழு டொமைன் போன்ற தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட Google கணக்குகள் அல்லது Google Workspace Essentials, Business Starter, Business Standard, Business Plus, Enterprise Essentials, Education Fundamentals, Frontline மற்றும் Nonprofits மற்றும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் G Suite Basic, வணிக வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் இதன் வெளியீடு விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.