டெலிகிராமில் தற்போது மறைக்கப்பட்ட மீடியாவை அனுப்புதல், படங்களுக்கு உரைகள் மற்றும் ஈமோஜிகளைச் சேர்த்தல் என பல்வேறு அம்ச அப்டேட்கள் வந்துள்ளன.
டெலிகிராம் தரப்பில் 2022 ஆண்டின் கடைசி அப்டேட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட்கள் ஐஓஎஸ் தளத்திற்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, டிராயிங் வரையும் கருவிகள், கான்டக்ட்ஸில் உள்ளவர்களின் ப்ரொபைல் படங்களை மாற்றுவதற்கான வசதி என சில அப்டேட்கள் வந்துள்ளன. அவை:
ஹிடன் மீடியா:
நீங்கள் இப்போது டெலிகிராமில் ஹிடன் மீடியாவை அனுப்பலாம். அதாவது நீங்கள் மின்னும் லேயருடன் படம் அல்லது வீடியோவை அனுப்ப வேண்டும், எதிர்முனையில் இருப்பவர் நீங்கள் அனுப்பியுள்ள மீடியாவைத் திறந்தவுடன் அவை தானாகவே மறைந்துவிடும்.
டெலிகிராமில் ஹிடன் மீடியாவை அனுப்ப, attachment மெனுவிற்குச் சென்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீடியாவைத் தேர்ந்தெடுத்து, டெலிகிராம் அரட்டையில் உங்கள் புகைப்படத்தில் Hide With Spoiler என்பதைக் கிளிக் செய்யவும்.
இதையும் படிங்க..இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!
ஜீரோ ஸ்டோரேஜ் (Zero storage user):
ஸ்மார்ட்போனில் குறைந்த மெமரியுடன் டெலிகிராமைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு சிறந்த அம்சமாகும். இந்த அம்சம் அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிகிராம் கிளவுட்டில் சேமிக்கும், தேவைப்படும்போது பதிவிறக்கம் செய்யலாம். பயனர்கள் இப்போது கேச் அளவை (ஸ்மார்ட்போனில் டெலிகிராம் எவ்வளவு சேமிப்பகத்தைப் பயன்படுத்தலாம்) மற்றும் கேச் மீடியாவை (ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம்) எப்போது டெலிட் செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம், இது தானாகவே ஸ்மார்ட்போனில் உள்ள மெமரியை நிரம்பாமல் பார்த்துக் கொள்ளும்.
புதிய டிராயிங் டூல்ஸ்:
டெலிகிராமில் புதிதாக டிராயிங் டூல்ஸ் வந்துள்ளன. அதில் மங்கலாக்கும் வசதி, இமெஜ்களில் எழுத்துக்களைச் சேர்க்கும் வசதி, ஈமோஜிகளை சேர்க்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய ஃப்ரொபைல் இமேஜ் வசதிகள்:
உங்கள் கான்டக்ஸில் உள்ளவர்களுக்கு பிரத்யேகமாக நீங்களே ஒரு ப்ரொபைல் பிக்சர்களை வைக்கலாம். இந்த ப்ரொபைல் பிக்சர் ஆனது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதேபோல், நீங்களும் ஒரு பொதுவான சுயவிவரப் படத்தையும் அமைக்கலாம், அது மற்ற அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!