பொதுவாக, ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ.50 செலவாகும் நிலையில், டிசம்பர் 14 வரை எந்த கட்டணமும் இல்லாமல் மாற்றங்கள் செய்ய முடியும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்கும் வசதியை ஆதார் ஆணையம் (UIDAI) அறிவித்தது. ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களைக் கட்டணமின்றி மாற்றிக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
முதலில், இலவச அப்டேட்டுக்கான காலக்கெடு ஜூன் 14 வரை இருந்தது. பின்னர், இந்த காலக்கெடு செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது, இரண்டாவது முறையாக, ஆன்லைன் மூலம் இலவசமாக ஆதார் அட்டை தகவல்களை அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை ஆதார் ஆணையம் மேலும் நீீட்டித்துள்ளது. இதன்படி, ஆதார் அட்டை விவரங்களை டிசம்பர் 14 வரை இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும்.
ஆதார் ஆணையம் (UIDAI) myAadhaar இணையதளத்தின் மூலம் இலவசமாக ஆதார் தகவல்களை புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகளைப் பெற்றவர்கள் தகவல்களைப் புதுப்பிக்காமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம் என்று ஆதார் ஆணையும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதான் ஜெமினி! சாட்பாட்களை இயக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு மாடல்!
ஆதார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செற்று இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். வழங்க வேண்டும். பொதுவாக, ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ.50 செலவாகும் நிலையில், டிசம்பர் 14 வரை எந்த கட்டணமும் இல்லாமல் மாற்றங்கள் செய்ய முடியும்.
ஆனால், இந்த கட்டணமில்லா திருத்தம் செய்யும் வசதி ஆன்லைனில் தாமாகவே செய்துகொள்ளும் அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆதார் மையங்களில் செய்யப்படும் திருத்தங்களுக்கு இலவச சேவை கிடையாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஆதார் அட்டை அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுவதால், பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் தகவல்களை அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. எனவே, கைரேகை, கருவிழி பதிவுகள் போன்ற அடையாளங்கள் மற்றும் முகவரி, மொபைல் எண் போன்ற தகவல்களை அப்டேட் செய்துகொள்ளலாம்.
Narendra Modi: பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம்! சாகச வாழ்க்கையில் அறியப்படாத தகவல்கள்