இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் வெறும் 15,000 ரூபாய்க்கு வருகிறது. அதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங்கின் கேலக்ஸி எம் தொடர் 2019 ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து ஜெனரல் இசட் மத்தியில் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. Galaxy M30s இல் உள்ள சக்திவாய்ந்த 6000mAh பேட்டரியில் இருந்து Galaxy M31s மற்றும் Galaxy M33 மற்றும் M53 5G இல் உள்ள 5nm செயலியுடன் கூடிய 64MP இன்டெல்லி-கேம் வரை, புதுமை கேலக்ஸி M தொடரின் அடையாளமாக உள்ளது.
50எம்பி டிரிபிள் கேமரா மூலம் ஒவ்வொரு கணத்தையும் படமெடுக்கவும் உதவுகிறது. நீங்கள் புகைப்பட பிரியராக இருந்தால், Samsung Galaxy M14 5G உங்களின் சரியான துணை. ஈர்க்கக்கூடிய 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 13எம்பி முன்பக்க கேமராவுடன், இந்த ஸ்மார்ட்போன் "மொமெண்ட்ஸ் மான்ஸ்டர்" என்று பொருத்தமாக அழைக்கப்படுகிறது.
f1.8 அபெர்ச்சர் லென்ஸ், குறைந்த ஒளி நிலையிலும் கூட, ஒவ்வொரு பொன்னான தருணத்தையும் பிரமிக்க வைக்கும் விதமாக படம்பிடிப்பதை உறுதி செய்கிறது. 5nm ப்ராசசர் மூலம் இயக்கப்படும் Samsung Galaxy M14 5G ஆனது நல்ல கேமிங் அனுபவத்தை கொடுக்கும். 5G வேகம் மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ஆன இது பவர்ஹவுஸ் பேட்டரியாக வருகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை இயங்கும். கூடுதலாக, இது 25W வேகமான சார்ஜிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. பேட்டரி ஆயுளைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்த OTT நிகழ்ச்சிகளை மீண்டும் அனுபவிக்கலாம்.
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!