ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மொபைலுக்கும் இஸ்ரோவுக்கும் சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு! என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Sep 14, 2023, 11:39 AM IST

ஆப்பிள் நிறுவனம் இஸ்ரோவின் NavIC தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட புதிய A17 ப்ரோ பிராசஸரை ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தியுள்ளது.


செயல்திறன் மற்றும் கேமராவில் பெரிய மேம்பாடுகளுடன் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மொபைல்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தப் புதிய ஐபோன்களில் முக்கியமான கனெக்டிவிட்டி அம்சத்திலும் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) NavIC தொழில்நுட்பம் ஐபோன் 15 மொபைல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயக்கப்படும் ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தைப் போல இந்தியாவால் உருவாக்கப்பட்ட மற்றொரு நேவிகேஷன் தொழில்நுட்பம்தான் NavIC ஆகும்.

Latest Videos

undefined

NavIC தொழில்நுட்பம் ISRO ஆல் உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த குவால்காம் (Qualcomm) நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. குவால்காம் தயாரிக்கும் மொபைல் பிராசஸர்களில் நேவிகேஷன் அம்சத்தைப் புகுத்த NavIC தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

14 ஆயிரம் ரூபாய் கம்மியா கிடைக்கும் ஐபோன் 15! எங்கே, எப்படி வாங்கலாம்? முழு விவரம் இதோ!

இப்போது அதேபோல இஸ்ரோ ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. NavIC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய A17 ப்ரோ பிராசஸர் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ப்ரோ மாடல்களில் இடம்பெற்றிருக்கிறது.

NavIC என்ற இந்தியாவின் தொழில்நுட்பத்தை ஆப்பிள் ஐபோன்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது சுவாரஸ்யமாக விஷயம். ஆப்பிளின் இணையதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் குறித்த விவரங்களில் GPS, GLONASS, Galileo, QZSS, BeiDou மற்றும் NavIC போன்றவை குறியீட்டுப் பெயர்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம்.

NavIC இரண்டு வகையான நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. 7 செயற்கைக்கோள்களின் அடிப்படையில் இத்தொழில்நுட்பம் செயல்படுகிறது. புதிய A17 ப்ரோ சிப்பைப் பற்றி கூறியிருக்கும் ஆப்பிள் நிறுவனம், A17 ப்ரோ கேமிங் பிரியர்களுக்கு ஐபோன்களில் 20 சதவீதம் கூடுதலான GPU செயல்திறனை வழங்கும் என்று கூறுகிறது. புதிய A17 ப்ரோ மூலம் 10Gbps வரை தரவு பரிமாற்ற வேகத்தை வழங்கும் வகையில் USB-C போர்ட்டும் புதிய ஐபோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 15 சீரிஸில் USB-C சார்ஜிங் வந்தது ஏன்? ஐரோப்பிய யூனியன் போட்ட கறாரான கன்டிஷன் தான் காரணமாம்!

click me!