ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் AirTag கொண்டு வருகிறது! இது என்ன கருவி?

By Dinesh TG  |  First Published Jan 18, 2023, 9:11 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் AirTag இருப்பிடமறியும் கருவி போலவே கூகுள் நிறுவனமும் ஏர்டெக் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் Air Tag என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களின் ஐபோன் தொலைந்து போனால், அல்லது திருடு போனால், அதை எளிதில் கண்டறிய உதவும் கருவியாகும். இதனால் ஆப்பிள் பிரியர்கள் மத்தியில் Air Tag கருவி நல்ல வரவேற்பைப் பெற்றது. 
இந்த நிலையில், ஆப்பிளின் ஏர்டேக் போலவே கூகுள் நிறுவனமும் சொந்தமாக ஒரு தடமறியும் டேக் உருவாக்கி வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு க்ரோகு, க்ரோகுஆடியோ அல்லது ஜிஆர்10 என்ற வகையில் குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ளது.

Google இன் இருப்பிட கண்காணிப்பு அம்சம்:

Latest Videos

undefined

குபா வோஜ்சிச்சோவ்ஸ்கி என்ற டெவவலப்பர் கூறுகையில், Fast Pair என்ற இருப்பிட கண்காணிப்பு கருவியை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும், இது அருகிலுள்ள புளூடூத் சாதனங்களை விரைவாக இணைப்பதற்கான புதிய வழிமுறை என்றும் தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு 6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு கொண்ட எந்தவொரு ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் Fast Pair அம்சத்தை இணைக்கலாம்.

மேலும், டிராக்கர் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கலாம், இதில் ஸ்பீக்கரும் இருக்கலாம். பயனர்கள் தங்கள் காணாமல் போன சாதனங்களை ஒலியின் உதவியுடன் கண்டுபிடிக்க உதவுகிறது. “இது ஏர்டேக்குகளைப் போலவே ஆன்போர்டு ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இது சில வெவ்வேறு வண்ணங்களில் வர வேண்டும் (இப்போது எனக்கு எந்த விவரமும் தெரியவில்லை என்றாலும்). UWB மற்றும் புளூடூத் லோ ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது" என்று வோஜ்சிச்சோவ்ஸ்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரா? இன்ஸ்டாகிராமா? வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்! அதிர்ச்சி முடிவுகள்!!

தயாரிப்பு எப்போது அறிவிக்கப்படும்?

தயாரிப்பின் அறிவிப்புக்கான உறுதியான காலக்கெடுவை வோஜ்சிச்சோவ்ஸ்கி கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு மே மாதம் நடக்கும் Google I/O டெவலப்பர் மாநாட்டின் போது இது தொடங்கப்படலாம் என்று அவர் கூறுகிறார். நிகழ்வின் சரியான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

click me!