Paytm மூலம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள் நிலை குறித்த பல விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் சேவை வழங்குநர்களில் ஒன்று Paytm ஆகும். இது UPI வழி பணப்பரிவர்த்தனைகள் என்பதில் தொடங்கி, திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், பில்களை செலுத்துதல் என பல்வேறு அம்சங்களை வழங்குகி வருகிறது.
இந்த நிலையில், பேடிஎம் தற்போது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி பேடிஎம் மூலமாகவே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், ரயில் PNR நிலை, ரயில் இருப்பிடம், வந்துகொண்டிருக்கும் இடம் போன்றவற்றை பார்க்கவும்.
மேலும், டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் உடனடி பணத்தைத் திரும்பப் பெறவும் முடியும். Paytm செயலியில் PNR உறுதிப்படுத்தல் முன்கணிப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பயனர்கள் தங்கள் ரயில் டிக்கெட்டுகள் உறுதிப்படுத்தப்படுமா என்பது பற்றிய தோராயமான யோசனையைப் பெற உதவுகிறது.
இதே போல், நாம் தேர்ந்தெடுத்த ரயில்களில் இருக்கைகள் கிடைக்காத சமயங்களில் அதற்கு ஏற்ப சிறந்த மாற்று வழிகளை வழங்கி உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IRCTC பயணிகள் Paytm செயலியைப் பயன்படுத்தி அருகிலுள்ள நிலையங்களைத் தேடலாம் மற்றும் அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் PNR நிலையைப் பார்க்கலாம். கூடுதலாக, ரயில் தாமதமானால் அதன் நேர விவரங்களையும் பார்க்கலாம்.
டுவிட்டரா? இன்ஸ்டாகிராமா? வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்! அதிர்ச்சி முடிவுகள்!!
இந்த பேடிஎம் செயலியில் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. 24 மணி நேரமும் உதவியைப் பெறலாம். மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவுகளுக்கு, Paytm UPI, Paytm Wallet, நெட் பேங்கிங், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட பேமெண்ட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இதற்காக எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Paytm போஸ்ட்பெய்டு மூலம் பின்னர் பணம் செலுத்துவதற்கான ஆப்ஷனும் உள்ளது.