Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

By Raghupati R  |  First Published Oct 17, 2022, 4:15 PM IST

தீபாவளி நெருங்கி வருவதால், கூகுளும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 2022 அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜின் நிறுவனமான கூகுள் இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்கு தீபாவளிக்கு ஆச்சர்யம் தரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில் பயனர்கள் கூகுளில் தனது பக்கத்தில் உள்ள தேடல் உரை பெட்டியில் 'தீபாவளி' அல்லது ‘தீபாவளி 2022’ என்றோ பதிவிட்டு தேட வேண்டும். இதனை உங்களது மொபைல், டேப்லெட் அல்லது மடிக்கணினி என எந்தவொரு தொழில்நுட்ப கருவி மூலமும் இதனை செய்து பார்க்கலாம்.

Latest Videos

undefined

இதையும் படிங்க..இந்தி பயிற்று மொழியா.? அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எச்சரித்த திருமாவளவன்

இதனை செய்தவுடன் டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் அகல்விளக்கு ஒன்று அழகாக தோன்றும். அதனை க்ளிக் செய்து பார்க்கும் போது, திரை முழுவதும் அகல் விளக்கு தோன்றி உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஒரு அழகான அனிமேஷன் பின்னணியில் அகல் விளக்கு மிகவும் அழகாக பயனர்களுக்கு அசத்தலாக ஆச்சர்யம் தருகிறது. இது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் மற்றும் கூகுள் போன்ற சாதனங்களிலும் கண்டுகளிக்கலாம். 

தீபாவளியின் வரலாறு பண்டைய இந்து இதிகாசமான ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிகாசத்தின்படி, 14 ஆண்டுகள் வனவாசம் செய்து, ராவணனை வீழ்த்திய பிறகு, ராமர், அவரது மனைவி சீதா மற்றும் சகோதரர் லக்ஷ்மணன் ஆகியோர் அயோத்திக்குத் திரும்பிய நாள் கொண்டாடப்படுகிறது.

கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் தனது லோகோவை டூடுல் செய்து கொண்டாடுகிறது. இது அடிப்படையில் விடுமுறை நாட்கள், குறிப்பிடத்தக்க நாட்கள், நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் பலவற்றைக் குறிக்க Google லோகோவின் தற்காலிக மாற்றமாகும். முதல் அனிமேஷன் டூடுல் 2010 இல் சர் ஐசக் நியூட்டனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

click me!