இந்தியாவில் 5ஜி சேவை அமல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், வெறும் 5% பயனர்கள் மட்டுமே 5ஜிக்கான ரீசார்ஜ் திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு, முக்கிய நகரங்களில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. 5ஜிக்கான ரீசார்ஜ் பிளான்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இப்போதைக்கு அன்லிமிடேட் 5ஜி டேட்டா வழங்கப்படுவதாகவும், 4ஜி சிம் மூலமாகவே 5ஜியை அனுபவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லோக்கல் சர்க்கிள் என்ற சமூகவலைதளத்தில் 5ஜி சேவைக்கான ரீசார்ஜ் கட்டணம் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 5ஜியில் எந்த அளவில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தலாம் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஆப்ஷன்களாக 10-25% அதிகரிக்கலாம், 25-50% அதிகரிக்கலாம், 75% அதிகரிக்கலாம், 100% அதிகரிக்கலாம் என்று வழங்கப்பட்டன.
எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் எப்போது 5ஜி கிடைக்கும்? இதோ பட்டியல்
ஆனால், கருத்தாய்வு முடிவில் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி, 5ஜிக்கான ரீசார்ஜ் கட்டணத்தை 10-25 சதவீதம் மட்டுமே அதிகரிக்கலாம் என்று 10% வாடிக்கையாளர்கள் வாக்களித்துள்ளனர். 25-50% அதிகரிக்கலாம் என்ற பதிலுக்கு வெறும் 2 சதவீத வாடிக்கையாளர்களே ஆதரவு அளித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் கொடுக்கப்பட்ட75% அதிகரிக்கலாம், 100% அதிகரிக்கலாம் என்ற ஆப்ஷன்களுக்கு யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதாவது, 5ஜிக்கு எதிராகவே இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துள்ளதாக தெரிகிறது.
5ஜி சேவையில் இருக்கும் பாதிப்புகள்.. பயனர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் தற்போதைக்கு 5ஜி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், அவ்வாறு 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும், அவர்களுடைய போனில் உள்ள 5ஜி பேண்ட் வரிசை, ஏர்டெல் ஜியோவுடன் பொருந்தாமல் உள்ளன. எனவே, 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தும் 5ஜி சேவையைப் பெறமுடியாத சூழல் உள்ளது.