எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் எப்போது 5ஜி கிடைக்கும்? இதோ பட்டியல்

By Dinesh TG  |  First Published Oct 17, 2022, 10:55 AM IST

இந்தியாவில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் எப்போது 5ஜி சேவை கிடைக்கும் என்பது குறித்து அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுபற்றிய முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.


இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி 2 ஆண்டுகளாகிவிட்டது. 5ஜி என்ற பெயரில் எக்கச்சக்க ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டன. தற்போது 5ஜி சேவை அமலுக்கு வந்துவிட்டது, ஆனால், 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவை கிடைக்கவில்லை.

முன்னனி பிராண்டுகளான ஐபோன், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் கூட 5ஜி கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களும், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இணைந்து 5ஜிக்கான அப்டேட் கொண்டு வருவதில் முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. 

Latest Videos

undefined

இந்த நிலையில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் எப்போது 5ஜி அப்டேட் வரும் என்பது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஷாவ்மி ஸ்மார்ட்போன்களில் இந்த அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை ஆக்டிவேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Update: நீண்ட காலமாக எதிர்பார்த்த அப்டேட் வந்துவிட்டது!

மோட்டோரோலா, ஐகூ, விவோ, ஒப்போ, ஒன்பிளஸ், டெக்னோ ஆகிய ஸ்மார்ட்போன்களில் நவம்பர் மாதத்திற்குள்ளாக 5ஜி முழுமை பெறும் என்றும், ஆப்பிள் ஐபோன்கள், கூகுள் பிக்சல் போன்களில் டிசம்பர் மாதத்திற்குள்ளாக 5ஜி சேவை இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளன. 

போகோ, நத்திங், ரியல்மி, இன்ஃபினிக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஏற்கெனவே தங்களது ஒருசில ஸ்மார்ட்போன்களில் 5ஜி நெட்வொர்க்கை கொண்டு வந்துவிட்டன. இந்த அக்டோபருக்குள் போகோ, நத்திங் ஸ்மார்ட்போன்களில் 5ஜி முழுமை பெறும். ரியல்மி, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் நவம்பருக்குள் 5ஜி முழுமை பெறும் என்றும் செய்திகள் வந்துள்ளன. 

5ஜி சேவையில் இருக்கும் பாதிப்புகள்.. பயனர்கள் கவனத்திற்கு!

சாம்சங் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒருசில ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையில் இயங்கி வருகின்றன. 5ஜி கிடைக்காத ஸ்மார்ட்போன்களில் டிசம்பருக்குள் 5ஜி கிடைத்துவிடும் என்று தெரியவந்துள்ளது. 

அண்மையில் தொலைத்தொடர்பு துறையினருடன் நடந்த கூட்டத்தில் இனி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள எல்லா ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி இருக்க வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!