பொது இடங்களான ரயில்வே நிலையம், விமான நிலையம் போன்றவற்றில் கிடைக்கும் USB சார்ஜர்களை உபயோகிக்காதீர்கள். இதனால் உங்கள் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
செல்போன்கள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதில் அதிக நன்மைகள் உள்ள அதே சமயத்தில் ஆபத்தும் உள்ளது. தொழில்நுட்பம் வளருவதற்கு ஏற்ப, நூதன மோசடிகளும் மாறுகின்றன.
அந்த வகையில், பொது இடங்களில் கிடைக்கும் USB சார்ஜர்களை உபயோகிக்கும்போது உங்கள் போனின் விவரங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறையினர், வங்கிகள் எச்சரிக்கின்றன.
ரயில் நிலையங்கள், பேருந்துநிலையங்கள், மால்கள் போன்றவற்றில் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகள் இருக்கும். அவற்றில் சில இடங்களில் பிளக் இல்லாமல், வெறும் USB பாயிண்ட் மட்டுமே இருக்கும். இதுதான் ஆபத்து நிறைந்தது.
இவ்வாறு கண்ட இடங்களில் கிடைக்கும் USB போர்ட் சார்ஜ் பாயிண்ட்களில் மின்சாரம் மட்டும் தான் வருகிறதா, அல்லது அதில் வேறு கருவிகள் ஏதும் உட்புறமாக பொருத்தப்பட்டுள்ளதா என்பது தெரியாது.
பலருக்கும் தெரியாத G board கீபோர்டு டிரிக்ஸ்! இனி இப்படி கூட மெசேஜ் அனுப்பலாம்!!
ஹேக்கர்கள் இந்த சார்ஜிங் பாயிண்டுகளைப் பயன்படுத்தி, அதில் ஹேக்கிங் கருவிகளை பொருத்துகின்றனர். இதில் நீங்கள் சார்ஜ் செய்யும் போது, உங்கள் போனில் உள்ள டேட்டா விவரங்களை உங்களுக்கே தெரியாமல் எடுத்துக்கொள்கிறது.
மேலும், உங்கள் போனில் மால்வேரை (malware) வைரஸை இன்ஸ்டால் செய்ய விட்டு, மூலம் மொபைலில் இருந்து தனிப்பட்ட தகவல்களை திருடலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, முடிந்த வரையில் பொது இடங்களில் USB சார்ஜிங் வசதிகளை தவிர்ப்பது நலம்.
GB WhatsApp செயலியால் ஆபத்து! இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை!!
இதேபோல், தற்போது 4ஜியிலிருந்து 5ஜி சிம்மிற்கு மாற்றி தருவதாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. மோசடி செய்பவர்கள் உங்கள் சிம் கார்டை முடக்கி, உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள்.
இதற்காக, மோசடி செய்பவர்களால் செல்போன் பயனருக்கு ஒரு லிங்கை அனுப்புகின்றனர். பயனர்கள் இந்த லிங்கை கிளிக் செய்தவுடன், அவர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான பல விவரங்கள் மோசடி செய்பவர்களுக்கு சென்றடையும். அதன் பிறகு அதை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர்.