மிகத் தரமான, எடை குறைந்த ASUS Zenbook 17 Fold என்ற லேப்டாப்பை அசுஸ் அறிமுகம் செய்தநிலையில், அதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அசுஸ் நிறுவனத்தின் சென்புக் 17 ஃபோல்டு லேப்டாப் அறிமுகமானது. இந்த லேப்டாப் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தற்போது ASUS Zenbook 17 Fold லேப்டாப்க்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இதன் விலை ரூ.3,29,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மூலம் 2,84,290 ரூபாய் ஆஃபரில் பெறலாம். மேலும், முன்பதிவு செய்வோருக்கு ரூ.32,100 மதிப்பிலான அசுஸ் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வருட வாரண்டி, 1 வருட எதிர்பாராத சேதத்திற்கான சலுகை, 500ஜிபி மெமரி கொண்ட எக்ஸ்ட்ரனல் SSD ஆகியவை வழங்கப்படுகின்றன.
Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!
சிறப்பம்சங்கள்:
· 17 இன்ச் அளவில் 2.5K துல்லியத்திறன் கொண்ட திரை உள்ளது.
· இதனை மடிக்கும் போது 12.5 இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும்.
· இதில் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் உள்ளது.
· இதனை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என ஏராளமோன மோட்களில் பயன்படுத்த முடியும்.
· 5MP வெப்காமிரா, அகச்சிவப்பு கதிர் கேமரா, 75Whr பேட்டரி, இரண்டு USB-C போர்ட், தண்டர்போல்ட் 4.0 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
· இதில் இண்டெல் கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் 16 ஜிபி LPDDR5 ரேம் 1 டிபி (1000 ஜிபி) NVMe PCie 4.0 SSD ஆகியவை வழங்கப்பட்டுள்ளன
5ஜி சேவையில் இருக்கும் பாதிப்புகள்.. பயனர்கள் கவனத்திற்கு!