Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!

Published : Oct 16, 2022, 11:30 PM IST
Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!

சுருக்கம்

​​கூகுளின் Google Pixel 7 Pro ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்க்ரோலிங் செய்யும்போது சீரற்ற முறையில் இயங்குவதாக பயனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் 12 ஜிபி ரேம் ஸ்டோரேஜுடன்  84,999 ரூபாய்க்கு அறிமுகமானது. இது ஹேசல், அப்சிடியன் மற்றும் ஸ்னோ வண்ணங்களில் வருகிறது. இது 12GB ரேம் மற்றும் 128GB உள் சேமிப்பகத்துடன் ஆக்டா-கோர் டென்சர் G2 SoC மூலம் இயக்கப்படுகிறது.

இதில் ஆப்ஸ்களை ஸ்க்ரோல் செய்வதில் சிக்கல் இருப்பதாக பல்வேறு வாடிக்கையாளர்கள் புகார் அளித்து உள்ளனர். குறிப்பாக இந்தப் பிரச்சனை தற்போது ப்ரோ மாடலில் மட்டுமே உள்ளது. இதுதொடர்பாக கூகுள் பிக்சல் 7 ப்ரோவின் ஆரம்பகால பயனர்கள் சிலர் ரெடிட் மற்றும் ட்விட்டர் தளத்தில் ஃபோனின் டிஸ்ப்ளே தொடர்பான சிக்கல்களைப் புகாரளித்தனர்.

ஒரு ரெடிட் பயனர் கூறுகையில், டச் ஸ்கிரீனை ஸ்க்ரோல் செய்யும்போது விரலின் பின் பக்கவாட்டில் தொடர்ந்து ஒட்டிக்கொள்வதாகவும், தட்டச்சு செய்யும் போது விசைப்பலகை தடுமாறுவதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், ஸ்க்ரோலிங் மிகவும் சீரற்றதாக இருப்பதாகவும், முக்கியமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களில் இந்த ஸ்க்ரோலிங் சிக்கல் அதிகமாக உள்ளதாகவும் அவர் புகார் அளித்து உள்ளார்.

இன்ஸ்டாகிராம் கேலரியில் வலது / இடதுபுறமாக ஃபிளிக் செய்யும் போது, ​​அடுத்த படத்தைப் பார்ப்பதற்கு பயனர் தங்கள் விரல்களை அதிகமாக நகர்த்த வேண்டியுள்ளதாகவும், லேசாக நகர்த்தினால் திரை மாறாமல் அப்படியே இருப்பதாகவும் கூறுகின்றனர். சில நேரங்களில் மெதுவாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் அது மிகவும் வேகமாக நகரும் எனவும் புகார் அளித்து உள்ளனர்.

பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் HD+ (1,440 x 3,120 பிக்சல்கள்) LTPO OLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இருப்பினும், டிஸ்ப்ளே தொடர்பான புகார் எழுந்துள்ளது. இதற்கு கூகுள் தரப்பில் விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?