சாம்சங் பிரியர்கள் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட்போன்கள் இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஆண்ட்ராய்டு 12 ஸ்மார்ட்போன்கள் தற்போது புழக்கத்தில் உள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளன. அவற்றின் முன்னோடியாக சாம்சங் நிறுவனம் தற்போது தனது -பிளாக் ஷீப் S 22 சீரிஸ், S 22 ப்ளஸ், S 22 அல்ட்ரா, ப்ளிப் 4 ஆகியவற்றில் ஆண்ட்ராய்டு 13 ஐ வழங்க உள்ளது.
மேலும், One UI 5 ஆனது ஆண்ட்ராய்டு 13 உடன் வர உள்ளது. இந்த ஒன் UI 5 தளத்தில் இருக்கும் முக்கிய அம்சமே, உங்களுக்கு விருப்பமான முறையில் நோட்டிபிகேஷனை நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். அத்துடன் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் டைனமிக் தீம்களுக்கான புதிய வண்ண வசதிகள் உள்ளன. இதில் அனைத்து ஆப்களின் ஐகான்களையும் வரிசையாக அடுக்கி உள்ளனர்.
பலருக்கும் தெரியாத G board கீபோர்டு டிரிக்ஸ்! இனி இப்படி கூட மெசேஜ் அனுப்பலாம்!!
இது ஸ்பிளிட் ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங்கிற்கான புதிய சைகைகள், மை பைல்ஸ் ஆப்ஸ், புதிய பிக்ஸ்பி டெக்ஸ்ட் கால் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சாம்சங்கின் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்டபோன்கள் வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ஜெர்மனி, கொரியா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிற நாடுகளிலும் அறிமுகமாகிறது.
வருகிறது Google Passkey.. இனி கைரேகை வைத்தாலே போதும்.. எதை வேண்டுமானாலும் லாகின் செய்யலாம்
முன்னதாக பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 கொண்டு வரப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்புகளுடன் ஒப்பிடுகையில், ஆண்ட்ராய்டு 13 இல் பயனர்களுக்கு தனிப்பட்ட முறையில் மாற்றிக்கொள்ளக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதாவது கஸ்டம் முறையில் நோட்டிபிகேஷனை மாற்றுதல், சைகை முறையில் ஷார்ட்கட்டுகளை உருவாக்கி பயன்படுத்துதல் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு 13 தளத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் எப்போது வெளிவரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.