சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், 5ஜி சேவையில் உள்ள குறைபாடுகள் குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர், குருகிராம், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் ஏர்டெல் 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி பீட்டா சேவை வழங்கியுள்ளது.
இப்போதைக்கு 5ஜிக்கு என தனியாக ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 4ஜி சிம் மூலமாகவே அன்லிமிடேட் 5ஜி சேவைகளை பெறலாம் என்று ஏர்டெல், ஜியோ தெரிவித்துள்ளன. இந்த நிலையில் 5ஜி சேவை முழுமை பெறும்பட்சத்தில் அதனால் பயனர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் யூகங்களின் அடிப்படையில் கருத்துகள் வந்துள்ளன. அதன்படி,
குறைந்த நேரத்தில் அதிகமான டேட்டா காலியாகுதல்:
ஜியோவில் 5ஜியைப் பொறுத்தவரையில் இணைய வேகம் 2Gbps வரையில் உள்ளது. ஏர்டெலில் 1Gbps வேகமும், Vi நெட்வொர்க்கில் 550 Mbps வேகமும் இருக்கிறது. இதனால் அளவுக்கு அதிகமான டேட்டா சட்டென்று காலியாகும் அபாயம் உள்ளது. அதாவது தற்போது சராசரியாக 4ஜியில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இதுவே 5ஜி சேவைக்கு மாறும்பட்சத்தில் வெறும் அரை மணி நேரத்தில் 2ஜிபி டேட்டா காலியாகலாம், இதனால் குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான டேட்டா காலியாகும் வாய்ப்புகள் உள்ளன.
Airtel, Jio, VI எந்த நெட்வொர்க்கில் 5ஜி வேகம் அதிகம்? நம்பர் 1 இடத்தில்…
ரீசார்ஜ் கட்டணம்?
5ஜியைப் பொறுத்தவரையில் ரீசார்ஜ் கட்டண திட்டங்கள் எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 4ஜி திட்டத்தைக் காட்டிலும் கூடுதலான கட்டணம் தான் இருக்கும். குறிப்பாக 5ஜியில் கிளவுட் கேமிங், அதிவேக டேட்டா ஸ்பீடு இருப்பதால் அதற்கு ஏற்ப அளவுக்கு அதிகமான கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் செய்து பழகியவர்களுக்கு, 5ஜி ரீசார்ஜ் கட்டணம் பாதகமாகவே இருக்கும்.
சும்மாவே ஸ்மார்ட்போன் சூடாகும், இதில் 5ஜி பயன்படுத்தினால் என்ன ஆகும்?
இயல்பாக ஸ்மார்ட்போன்களில் உள்ள சிப் வகைகள் 4ஜியில் இயங்கிக்கொண்டிருக்கும். 5ஜி போன்களில் 5ஜிக்கு என்று கூடுதலான சிப் இருக்கும். எனவே, 5ஜி சேவையை இயக்கினால், இயல்பான சிப்செட்டும் இயங்கும், கூடுதல் சிப்செட்டும் இயங்கும். ஒரு சிப் இயங்கும் போதே மொபைல் சூடாகிறது. இரண்டு சிப்கள் இயங்கும்பட்சத்தில் கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும். எனவே, டர்போ கூலிங், லிக்யூட் கூலிங் இருக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குவது நலம்.
Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!
ஹேக்கர்கள் அச்சுறுத்தல்:
ஒரு நெட்வொர்க்கை முழுமையாக பொதுப் பயன்பாட்டுக்கு வருவதற்கு பல கட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 5ஜி சேவை முழுமை பெறுவதற்கு ஒரிரு ஆண்டுகள் ஆகலாம். இந்த இடைப்பட்ட காலத்தில், அதாவது 5ஜி நெட்வொர்க்கில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இல்லாதபட்சத்தில், ஹேக்கர்களின் ஊடுருவல் அச்சுறுத்தல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் தற்போதைய சூழலில் 5ஜி சேவையில் ஒரு பாதகமாக பார்க்கப்படுகிறது.