எலான் மஸ்க் புதிய எக்ஸ்-மெயில் சேவையை அறிமுகப்படுத்தி ஜிமெயிலுக்குப் போட்டியாகக் களமிறங்க உள்ளார். இந்தப் புதிய சேவை பயனர்களுக்குச் செய்தி அனுப்ப ஒரு மாற்று வழியை வழங்கும்.
டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் புதிய எக்ஸ் மெயிலைக் கொண்டுவர முன்வந்துள்ளார். இதன் மூலம் பிரபலமான ஜி-மெயிலுக்குப் போட்டியாகக் களமிறங்க உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் கணக்கில் புதிய மெயில் தொடங்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். பயனர்களுக்குச் செய்தி அனுப்ப ஒரு மாற்று வழியை எலான் மஸ்க் தொழில்நுட்ப உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். இதற்கு எக்ஸ்-மெயில் என்று பெயரிட்டுள்ள எலான் மஸ்க், இது அருமையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரபலமான தேடுபொறியான கூகிளின் ஜிமெயில் நெட்டிசன்களின் முதல் தேர்வாக உள்ளது. கார்ப்பரேட் உலகிலும் ஜிமெயில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ்-மெயில், எதிர்காலத்தில் ஜி-மெயில், இ-மெயில் போலவே செயல்படும் என்று கூறப்படுகிறது. எலான் மஸ்க், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளில் இதுவும் ஒன்று என்று எழுதி, எக்ஸ் மெயில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகாவின் லவ்வருடன் மோதும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 3 வில்லன் இவர்தான்?
தற்போது உலகில் ஆப்பிள் மெயில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. செப்டம்பர்-2024 நிலவரப்படி, ஆப்பிள் மெயில் 53.67%, இரண்டாம் இடத்தில் உள்ள ஜிமெயில் 30.70% பயனர்களைக் கொண்டுள்ளது. அவுட்லுக், யாகூ மெயில், ஆண்ட்ராய்டு மெயில்களும் புழக்கத்தில் உள்ளன. எதிர்காலத்தில் எக்ஸ் மெயில் தற்போதைய மெயில்களுக்குக் கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.