Zomato இணை நிறுவனர் மோஹித் குப்தா ராஜினாமா! பெருநிறுவனங்களில் அடுத்தடுத்து வெளியேற்றம்!!

By Narendran SFirst Published Nov 18, 2022, 11:56 PM IST
Highlights

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்களில் பெரும் ராஜினாமா, பணிநீக்க நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், தற்போது சொமேட்டோ நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்த இணை நிறுவனர் ராஜினாமா செய்துள்ளார்.

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்களில் பெரும் ராஜினாமா, பணிநீக்க நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், தற்போது சொமேட்டோ நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்த இணை நிறுவனர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எலான் மஸ்க்கின் நடவடிக்கையால் டுவிட்டர் நிறுவனத்தில் பெரும் பதவி வகித்து வந்த சிஇஓ, சிஎப்ஓ தலைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்போது வேலை இழந்துள்ளனர். இதே போல் கூகுள், அமேசான், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களிலும் பெரும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இந்த வரிசையில் தற்போது சொமோட்டோவும் பலியாடாகியுள்ளது. சொமோட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மோஹித் குப்தா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படிங்க: செம்ம டிரிக்ஸ்! எல்லோரும் WhatsApp Web பார்த்தால் கூட, உங்க கண்ணுக்கு மட்டும் தான் மெசேஜ் தெரியும்!!

2020 இல் இணை நிறுவனராக உயர்த்தப்பட்ட குப்தா, Zomatoவில் அதன் உணவு விநியோக பிரிவின் தலைமை நிர்வாகியாகவும், அதன் புதிய முயற்சிகளின் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இந்த நிலையில், கௌரவ் குப்தா மற்றும் மோஹித் குப்தா இருவரும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இணை நிறுவனர்களாக பதிவு உயர்வு பெற்றனர். சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகள் குறைந்ததையடுத்து, இணை நிறுவனர் பதவியில் இருந்து மோஹித் குப்தா பதவி விலகினார். Zomatoவில் இருந்து வெளியேறும் மூன்றாவது பெரும் தலைவராக மோஹித் குப்தா வந்துள்ளார். இதற்கு முன்பு ராகுல் கஞ்சூ என்பவர் இனிசியட்டிவ்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன்பிறகு, சித்தார்த் ஜாவர் என்பவர் இந்த மாத தொடக்கத்தில் துணைத் தலைவர் மற்றும் இன்டர்சிட்டி லெஜண்ட்ஸ் சேவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

இதையும் படிங்க: Twitter அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்! பணியாளர்கள் ராஜினாமா எதிரொலி!!

கெளரவ் குப்தா விடைபெறும் நிலையில், சொமோட்டோ பணியாளர்களுக்கு வாழ்த்துசெய்தி எழுதியுள்ளார். அதில் அவர், "கடந்த சில ஆண்டுகளாக, தீபி (ஜோமாடோ இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் ) நல்ல அனுபவம் முதிர்ந்த மற்றும் நம்பிக்கையான தலைவராக மாறியுள்ளார். அவர் இப்போது உங்கள் அனைவரையும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் திறன் கொண்டவராக இருப்பதாக நம்புகிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார். கெளரவ் குப்தா இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு, அதாவது Zomatoவில் சேருவதற்கு முன்பு, MakeMyTrip என்ற ஆன்லைன் டிராவல் டிக்கெட் முன்பதிவு தள நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார். மேலும், பெப்சிகோ இந்தியாவில் சந்தைப்படுத்தல் துணைத் தலைவராகவும் கௌரவ் குப்தா பணியாற்றினார்.

click me!