மூணு மாசத்துல 40 பில்லியன் டாலர் நஷ்டம்! அசால்ட்டாக இருந்து கோட்டை விட்ட எலான் மஸ்க்!

By SG Balan  |  First Published Mar 9, 2024, 7:30 PM IST

எலான் மஸ்க் சொத்து வீழ்ச்சி அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 29% சரிந்ததும் முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.


2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு எதிர்பாராத அளவுக்கு அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 3 மாதங்களில் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இப்போது 189 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் லோயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்குப் பின் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார்.

Latest Videos

undefined

பெசோஸ் எலோன் மஸ்க்கை முந்தியதை அடுத்து, இந்த வாரத் தொடக்கத்தில் அர்னால்டும் அவரை முந்திச் சென்றார். எலான் மஸ்க் சொத்து வீழ்ச்சி அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 29% சரிந்ததும் முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் புதிய படத்தை வெளியீடு! மக்கள் உதவியை கோரும் என்.ஐ.ஏ!

எக்ஸ் என்று பெயர் மாறியிருக்கும் ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு எலான் மஸ்க் கோரிய 55 பில்லியன் டாலர் இழப்பீடை  டெலாவேர் நீதிமன்றம் நிராகரித்துள்ளநு. இதுவும் எலான் மஸ்கின் பின்னடைவுக்கு மற்றொரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

2022இல் ட்விட்டரைக் கையகப்படுத்தியதில் இருந்து அதில் பல மாற்றங்களைச் செய்த எலான் மஸ்க், விளம்பரதாரர்களைத் தக்கவைக்க போராடி வருகிறது. இதனால் எக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களும் எலான் மஸ்க் அடைந்துள்ள இழப்புக்குக் காரணம்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் சார்பாக புதிதாக ஸ்மார்ட் டிவி அப்ளிகேஷன் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் அமேசான் மற்றும் சாம்சங் பயனர்கள் ஸ்மார்ட் டிவிகளில் நீண்ட வீடியோக்களைப் பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் யூடியூப் வழங்கும் ஸ்மார்ட் டிவி ஆப் போலவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யூடியூப்புடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சந்திரயான் 4 திட்டத்தில் டபுள் ராக்கெட்! மாஸ் காட்டும் இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்!

click me!