விடுமுறையில் இருப்பவரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சம்பந்தமான மெசேஜ் மற்றும் மீட்டிங் என நடைபெறுவது வாடிக்கையாகும்.
இனி இதுபோன்ற செயல்கள் நடக்கக்கூடாது என்று பிரபல நிறுவனம் ஒன்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் ஸ்போர்ட்ஸ் ஆப் நிறுவனமான ட்ரீம்-11 தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, ஊழியர்களுக்கு ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்யும் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கும் ட்ரீம்-11 அன்பிளக்(Unplug) பாலிசி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!
இந்த பாலிசியின் படி விடுப்பில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது குறித்து கருத்து தெரிவித்த ட்ரீம்-11 நிறுவனம், நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு நாளில் முழு சுதந்திரம் கொடுக்கிறோம். மேலும் அன்பானவர்களுடன் அவர்கள் நேரம் செலவிடும்போது, அதனைக் கெடுக்க விரும்பவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
இந்த விதிமுறை உண்மையிலேயே ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை வழங்கும் என்று நிறுவனம் நம்புகிறது.விடுமுறையை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அலுவலக தொடர்பான செய்திகள் அவர்களுடைய மன நிலையைப் பாதிக்கக் கூடும்.
அப்படிப் பாதிக்கப்பட்டால் அவருடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும், அதன் மூலம் அந்த வாழ்க்கைத் தரம் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் அலுவலகத்திலும் பாதிக்கப்படக் கூடும் என்பதால் தான் இப்படியொரு பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா