இந்தியாவில் ChatGPT கட்டண சந்தா அறிமுகம்.. காசு கொடுக்குற அளவுக்கு வொர்த்தா?

By Asianet Tamil  |  First Published Mar 17, 2023, 9:30 PM IST

OpenAI உருவாக்கியுள்ள ChatGPT தளத்தின் கட்டண சந்தா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, காசு கொடுக்கும் அளவுக்கு வொர்த்தா என்பது குறித்து இங்கு காணலாம்.


OpenAI ஆனது GPT-4 எனப்படும் மனிதனைப் போலவே பதிலளிக்கக் கூடிய ஒரு புதிய மொழி நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு GPT-3.5 அறிமுகமானது, அந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தற்போது ChatGPT  மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலவகையான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக படைப்பாற்றல், காட்சிப் புரிதல், சூழலுக்கு தகுந்தவாறு ஆகச்சிறந்த பதில்களை வழங்குதல் போன்றவை உள்ளன. 

எனவே, அடிப்படையாக பார்த்தால் GPT-4 தளமானது இதற்கு முன்பிருந்த AI விட மேம்பட்டது. மேலும் இசை, திரைக்கதைகள் மற்றும் கம்ப்யூட்ட கோடிங் அளவுக்கு படைப்புத் திட்டங்களை உருவாக்க உதவுகிறது.  இந்த சாட் ஜிபிடியானது கட்டணத்துடன் கூடிய பயன்பாடு, கட்டணமிலா பயன்பாடு என இரண்டு விதமாக கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரையில் இலவசப் பயன்பாடு மட்டுமே இருந்து வந்தது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், OpenAI உருவாக்கியுள்ள ChatGPT தளத்தின் கட்டண சந்தா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக OpenAI நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘அட்டகாசமான செய்தி! ChatGPT Plus சந்தாக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கின்றன. இன்றே GPT-4 உட்பட புதிய அம்சங்களுக்கான ஆரம்ப அணுகலைப் பெறுங்கள்: https://chat.openai.com’  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ChatGPT Plus  கட்டணம் மாதத்திற்கு US$ 20 (தோராயமாக ரூ. 1650) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

மைக்ரோசாப்ட் வேர்டு, பவர்பாயிண்ட், எக்சல் மென்பொருட்களில் ChatGPT சேர்ப்பு!

ChatGPT Plus சந்தாதாரர்கள் GPT-4 வசதியைப் பெறலாம்:

ChatGPT பிளஸ் என்பது ChatGPTக்கான புதிய சந்தா திட்டமாகும், மற்ற பயனர்களைக் காட்டிலும் முன்கூட்டிய புதிய அம்சங்களைப் பெறலாம். பதிலளிப்பு வேகமும் அதிகமாக இருக்கும். அதிக தேவையின் போதும் கிடைக்கும். எதிர்காலத்தில், அவர்கள் GPT-4 பயன்பாட்டிற்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால், எதிர்காலத்தில் சந்தா கட்டணமும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தா இல்லாதவர்களுக்கு, இலவச GPT-4 பதிலளிப்பு அம்சங்களை வழங்க ஒபன்ஏஐ நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. 

ChatGPT பிளஸ் நன்மைகள்:

Chat.openai.com தளத்தில் GPT-4 பெறலாம், பயனரின் தேவை மற்றும் கணினி செயல்திறனுக்கு ஏற்ப மேம்பட்ட பதிலளிப்பு வேகம் , முன்கூட்டிய புதிய அம்சங்களைப் பெறலாம்

ChatGPT 4 இலவசமாக வேண்டுமா? ரொம்ப ஈஸி தான்!

மைக்ரோசாப்ட் பிங்க் பிரவுசர்:

மேம்பட்ட Bing Chat தளமானது கடந்த மாதம் உலகளவில் தொடங்கப்பட்டது, ஆனால் அது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில், தற்போது  மைக்ரோசாப்ட் அனைத்து பயனர்களுக்கும் Bing Chat தளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அதுவும் இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. 

Bing Chatடைப் பயன்படுத்துவதற்கு, சாதரணமாக Bing தேடலைத் திறந்து, மேல் இடதுபுறத்தில் Chat பகுதியை தேர்வு செய்தால் போதும்.  உங்கள் மைக்ரோசாஃப்ட் கணக்கில் உள்நுழைந்து, GPT-4 மூலம் இயக்கப்படும் Bing Chat பெறலாம்.
 

click me!