சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் உள்ள APXS கருவி நிலவில் கந்தகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் விக்ரம் லேண்டரின் கண்டுபிடிப்பு உறுதியாகியுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவி, நிலவில் சல்பர் (கந்தகம்) இருப்பதை இன்னொரு தொழில்நுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்தியதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரோ (ISRO) நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ட்விட்டரில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில், ரோவரில் உள்ள ஆல்பா பார்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) என்ற கருவி நிலவில் கந்தகம் மற்றும் பிற சிறிய தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது தெரியவந்துள்ளது.
"சந்திரயான்-3 விண்கலத்தின் இந்த கண்டுபிடிப்பு, நிலவில் உள்ள சல்பரின் மூல ஆதாரங்கள் குறித்து விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கிறது" என்று கூறியுள்ள இஸ்ரோ, கண்டுபிடிக்கப்பட்டுள்ள சல்பர் நிலவில் உள்ளார்ந்து இருப்பதா, எரிமலை வெடிப்பின் மூலமோ, விண்கல் மூலமோ உருவானதா என்ற கேள்வி எழுவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
ஸ்மைல் பிளீஸ்! விக்ரம் லேண்டரை முதல் முறையாக படம் பிடித்த பிரக்யான் ரோவர்!
Chandrayaan-3 Mission:
In-situ Scientific Experiments
Another instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.
The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.
This… pic.twitter.com/lkZtz7IVSY
18 செமீ உயரமுள்ள APXS ஸ்பெக்ட்ரோஸ்கோப் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் வீடியோவையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது. நிலவின் மேற்பரப்புக்கு அருகாமையில் அதன் டிடெக்டர் பகுதி சுமார் 5 செமீ வரை சென்று ஆய்வு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது.
APXS என்றால் என்ன?
ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) என்பது பிரக்யான் ரோவரில் காணப்படும் கருவியாகும். நிலவில் இந்தக் கருவியைக் கொண்டு பிரக்யான் ரோவர் ஆய்வில் ஈடுபடுவதை விக்ரம் லேண்டரின் இமேஜர் கேமரா பதிவு செய்துள்ளது.
சந்திரன் போன்ற சிறிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளின் தனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கு APXS கருவி மிகவும் பொருத்தமானது. இது ஆல்பா துகள்கள் மற்றும் எக்ஸ்-கதிர்களைச் செலுத்தி ஆய்வு செய்கிறது.
செவ்வாய்கிழமை வெளியான சந்திரயான்-3 அப்டேட்டில், பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது என்றும் இஸ்ரோ கூறியது. "Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si மற்றும் O ஆகியவையும் எதிர்பார்த்தபடி கண்டறியப்பட்டுள்ளன. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
"வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முதற்கட்ட ஆய்வுகள் மூலம் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவை நிலவின் மேற்பரப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவை இருப்பதும் தெரிகிறது. ஹைட்ரஜன் இருப்பது குறித்து முழுமையான விசாரணை நடந்துவருகிறது" என்று இஸ்ரோ அறிக்கை கூறுகிறது.
முன்னதாக, சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் உள்ள பேலோட் நிலவின் மேற்பரப்புக்கு 10 செமீ ஆழம் வரை மட்டுமே ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.