ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல் ஸ்டிக்கர்ஸ்! பாசத்தைக் காட்ட புது ரூட் போட்டு கொடுக்கும் வாட்ஸ்அப்!

By SG BalanFirst Published Aug 30, 2023, 7:41 PM IST
Highlights

வாட்ஸ்அப் மூலம் உங்கள் பிரியத்திற்குரிய நபர்களுடன் ஸ்பெஷல் ஸ்டிக்கர்களைப் பகிர்ந்து இந்த ரக்ஷா பந்தன் நாளைக் கொண்டாடலாம்.

ரக்ஷா பந்தன் என்பது சகோதர பாசத்தை வெளிப்படுத்த நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகையை கொண்டாட, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள். புனிதமான ராக்கி நூலைக் கட்டுகின்றனர்.

தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி மகிழ்விக்கின்றனர். ஆனால், தொலை தூரத்தில் வசிப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறுவதன் மூலம் தங்கள் அன்பைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் இந்த நாளை மேலும் மகிழ்ச்சியாகக் கழிக்க வாட்ஸ்அப் அழகிய வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது.

வாட்ஸ்அப் பயனர்கள் ரக்‌ஷா பந்தன் நாளை முன்னிட்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட GIF மற்றும் ஸ்டிக்கர்களை அனுப்பி மகிழலாம். ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் உங்கள் பிரியத்திற்குரிய நபர்களுடன் ஸ்பெஷல் ஸ்டிக்கர்களைப் பகிர்ந்து இந்த ரக்ஷா பந்தன் நாளைக் கொண்டாடலாம்.

மனதில் கொள்ள வேண்டியவை:

ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் மொபைலில் பிற தளங்களில் இருந்தும் ரக்‌ஷா பந்தன் ஸ்டிக்கர்களைப் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஆனால், ஆப்பிள் பயனர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.

ஆண்ட்ராய்டு பயனர்கள், தாங்களே ஸ்டிக்கர்களை உருவாக்க, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்டிக்கர் மேக்கர் செயலிகளை பயன்படுத்தலாம். iOS 16 அல்லது லேட்டஸ்ட் ஐபோன் வைத்திருக்கும் பயனர்களும் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். எந்தவொரு புகைப்படத்தையும் ஸ்டிக்கராக மாற்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு மொபைலில் ரக்‌ஷா பந்தன் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ட்வுன்லோடு செய்வது எப்படி?

1. பிளே ஸ்டோரைத் திறந்து ரக்‌ஷா பந்தன் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களைத் தேடுங்கள்.

2. நீங்கள் விரும்பும் வகையில் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

3. டவுன்லோடு செய்ய விரும்பும் ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து, 'Add to WhatsApp' என்பதை கிளிக் செய்யவும்.

4. வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் பேக்கை டவுன்லோட் ஆகிவிட்டதை உறுதிப்படுத்தவும்.

5. இப்போது, ஸ்டிக்கரைப் பகிர விரும்பும் நபருடனான வாட்ஸ்அப்  உரையாடலைத் திறக்கவும்.

6. ஈமோஜி பகுதிக்குச் சென்று, புதிதாக சேர்க்கப்பட்ட ஸ்டிக்கர்களில் இருந்து பிடித்த ஸ்டிக்கரை தேர்வு செய்யவும்.

7. தேர்வு செய்த ஸ்டிக்கரை கிளிக் செய்து அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

click me!