ட்விட்டர் பெயர், லோகோவை மாற்ற திட்டம்! பறவைக்கு குட்பை சொல்லும் எலான் மஸ்க்!

By SG BalanFirst Published Jul 23, 2023, 4:52 PM IST
Highlights

ட்விட்டர் என்ற பிராண்டை மாற்றி அமைக்கும் திட்டத்தை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டரின் அடையாளமாக இருக்கும் பறவை லோகோவையும் மாற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் ஞாயிற்றுக்கிழமை நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் தனித்துவமான அடையாளமாக இருந்துவரும் பறவை லோகோவை  விரைவில் மாற்ற இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக ட்விட்டரின் பிராண்ட் அடையாளமாக இருந்துவரும் பறவை லோகோவை மாற்றப்போவதாகக் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் எழுதிய பதிவில், “விரைவில் நாங்கள் ட்விட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் விடைகொடுப்போம். இன்றிரவே நல்ல X லோகோ உருவாக்கிவிட்டால், நாளை உலகம் முழுவதும் அது செயல்பாட்டுக்கு வந்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

ஆன்லைனில் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்தவருக்கு 8 அட்வைஸ்! எஸ்பிஐ சொல்வது என்னென்ன தெரியுமா?

கடந்த ஆண்டு ட்விட்டர் சமூக ஊடக வலைத்தளத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றமாக இது இருக்கலாம். ட்விட்டர் இனி தனி நிறுவனம் இல்லை, இது புதிதாக உருவாக்கப்பட்ட எக்ஸ் கார்ப் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்த ‘எக்ஸ்’ பற்றி எலான் மஸ்க் கூறுவது இது முதல் முறை அல்ல. ஏப்ரல் மாதம், லிண்டா யாக்காரினோவை ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தபோது, எஸ்க் பற்றி ட்வீட் செய்திருந்தார். "இந்த தளத்தை எல்லாவற்றையும் உள்ளடக்கிய எக்ஸ் செயலியாக மாற்ற லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ட்விட்டரை வாங்கியதன் மூலம், எஸ்க் செயலியை உருவாக்கும் பணி விரைவாக நடக்கும் என  கடந்த ஆண்டு அக்டோபரில் ட்வீட் செய்திருந்தார். ட்விட்டர் லோகோவை மாற்றத்தையும் எலான் மஸ்க் ஏற்கெனவே செய்து காட்டியிருக்கிறார். கடந்த ஏப்ரலில் டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் நாய் படத்தை, தனது ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவாக வைத்தார். சில நாட்களுக்கு ட்விட்டரின் குருவி லோகோவுக்குப் பதிலாக நாய் படம் இருந்தது.

WhatsApp tip: வாட்ஸ்அப் எடிட் ஆப்ஷன்! தவறாக அனுப்பிய மெசேஜை ஈசியாக திருத்துவது எப்படி?

click me!