வாட்ஸ்அப் பயனர்கள் அனுப்பிய மெசேஜை திருத்துவதற்கு, அனுப்பிய நேரத்தில் இருந்து 15 நிமிடம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெர்சனல் சாட்களை லாக் செய்வது, பல மொபைல்களில் வாட்ஸ்அப் லாக்-இன் செய்வது போன்ற வசதிகளை அளிக்கும் புதிய அம்சங்களுடன் அனுப்பிய மெசேஜை திருத்தும் வாய்ப்பையும் வாட்ஸ்ஆப் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எடிட் மெசேஜ் வசதி வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்த அனுமதிக்கிறது. ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பு உள்ளது. ஒருவரால் எந்த நேரத்திலும் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது. எழுத்துப்பிழை, தவறான வார்த்தை போன்றவை இருந்தாலோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய செய்தியாக இருந்தாலோ அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
undefined
119 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகம்! அமெரிக்க நூலகத்தில் நிகழ்ந்த அதிசயம்!
இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும். ஆனால், வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனில்தான் திருத்தம் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே, பழைய வெர்ஷன் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயனர்கள் இந்த வசதி வேண்டும் என்றால் புதிய வெர்ஷனுக்கு மாற வேண்டும்.
இதற்கு முன் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டது. அதைவிட இந்த எடிட் மெசேஜ் வசதி அதிக பயனுள்ள அம்சமாக உள்ளது. தவறு இருந்தால் அந்த மெசேஜை நீக்கிவிட்டு மீண்டும் டைப் செய்வதற்குப் பதிலாக, பிழைகளை மட்டும் விரைவாக சரிசெய்ய இந்த எடிட் ஆப்ஷன் உதவுகிறது.
ஒரே நாளில் டுவிட்டருக்கு மரண பயத்தை காட்டிய மார்க்... திரெட்ஸுக்கு ஆப்பு வைக்க தயாரான எலான் மஸ்க்
வாட்ஸ்அப் பயனர் இப்போது இரண்டு வசதிகளையும் பயன்படுத்தி தவறுகளைத் தவிர்க்கலாம். மெசேஜை திருத்த குறைவான நேரம் அனுமதிக்கப்பட்டாலும், அனுப்பிய மெசேஜை டெலிட் செய்ய அதிக அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த வசதிகள் பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் ஓரளவு பயன்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் திருத்த விரும்பும் மெசேஜை ஓரிரு விநாடிகள் இடைவிடாமல் அழுத்தினால், மெசேஜை திருத்துவதற்கான ஆப்ஷன் தோன்றும். அதைத் தேர்வு செய்ததும் மெசேஜை திருத்த முடியும். பின்னர் தேவையான திருத்தத்தைச் செய்தால் வேலை முடிந்துவிடும்.
வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!
அனுப்பிய மெசேஜை திருத்துவதற்கு, அனுப்பிய நேரத்தில் இருந்து 15 நிமிடம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு, மாற்றங்களைச் செய்ய எடிட் ஆப்ஷன் இருக்காது. ஆனால், அந்த மெசேஜை unsend செய்யும் வசதி மட்டும் இருக்கும். தேவைப்பட்டால் அதை பயன்படுத்தி மெசேஜை நீக்கிவிடலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு மெசேஜை திருத்தினால் அது குறித்து பெறுநருக்கு தனியாக நோட்டிபிகேஷன் அனுப்பப்படாது. ஆனால், திருத்தப்பட்ட மெசேஜுக்குக் கீழே Edited என்ற குறிப்பு மட்டும் இருக்கும். போட்டோ, வீடியோ போன்றவற்றை அனுப்பும்போது அவை பற்றிய குறிப்புகளை (Caption) சேர்த்து அனுப்பினால், அவற்றைத் திருத்தும் வசதி கிடையாது.
அதிகரித்து வரும் பணக்காரக் குடும்பங்கள்... தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ஆய்வில் தகவல்