உலகத்தரம் வாய்ந்த, இந்தியத் தரவுகளில் பயிற்சி பெற்ற AI மாதிரியை உருவாக்க, ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோரிடம் இருந்து IndiaAI டெண்டர்களை வரவேற்கிறது. இந்தியச் சூழலுக்கேற்ற, உலகளாவிய தரத்திலான AI மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம். மேலும் விவரங்களுக்கு tenders@indiaai.gov.in -ல் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தரவுத்தொகுப்புகளில் பயிற்சியளிக்கப்பட்ட அதிநவீன AI மாடலை உருவாக்குவதற்கு ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரிடமிருந்து மத்திய அரசு டெண்டர்களைக் கோரியுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த இந்தியா ஏஐ (IndiaAI) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியச் சூழலில் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் அதே வேளையில் உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் உள்நாட்டு AI மாடலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என இந்தியா ஏஐ கூறியுள்ளது.
தற்போதுள்ள AI அமைப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும், AI தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கான மையமாக இந்தியா வளர்வதற்கும் இந்தியா AI திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. IndiaAI திட்டம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் கீழ் இயங்கும்.
வங்கி பெயரில் போலி IVR அழைப்பு! பெண்ணிடம் ரூ.2 லட்சம் பறித்த மோசடி கும்பல்!
IndiaAI இன்னோவேஷன் சென்டரின் இந்தியாவின் AI மாடல்களை உருவாக்க ஆதரவளிக்குமாறு இந்திய ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தரவுத்தொகுப்புகளில் பயிற்சியளிக்கப்பட்ட அதிநவீன AI மாடல்களை உருவாக்குவதற்கு ஒத்துழைக்க ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரிடம் இருந்து முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய சூழலில் நிலவும் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் அதே வேளையில் உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் AI மாடலை உண்டாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது. குறிப்பிட்ட டொமைன்கள் அல்லது பயன்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட LLM, SLM எதுவாகவும் இருக்கலாம். AI தொழில்நுட்பத்தில் உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதுதான் முக்கியக் குறிக்கோள் எனவும் IndiaAI வெளயிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IndiaAI திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய tenders@indiaai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
மனைவியின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்புறீங்களா? இதை கொஞ்சம் யோசிங்க!