சாம்சங் போனுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு; நல்ல சான்ஸ்; மிஸ் பண்ணாதீங்க!

Published : Jan 30, 2025, 05:04 PM IST
சாம்சங் போனுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு; நல்ல சான்ஸ்; மிஸ் பண்ணாதீங்க!

சுருக்கம்

ப்ளிப்கார்ட்டில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பனா முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ54

ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி போட்டு விலை குறைப்பு செய்து வருகின்றன. அந்த வகையில் ப்ளிப்கார்ட் சாம்சங் போனுக்கு அதிரடி விலை குறைப்பு செய்துள்ளது. இது குறித்து விரிவாக காணலாம். ப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி (SAMSUNG Galaxy A54 5G) மாடல் ஸ்மார்ட்போனுக்கு 47% என்ற மிகப்பெரும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

அதாவது ரூ.45,999 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.23,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக ரூ.22,000 என பாதிக்கு பாதி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிங் பேங்க் கிரேடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளுக்கு சலுகையும் உண்டு.

EMI வசதி உண்டு

இந்த சாம்சங் போனை உடனே வாங்க உங்கள் கையில் பணமில்லையா? கவலையை விடுங்கள். நீங்கள் அதை EMIயிலும் வாங்கிக் கொள்ளலாம். அதாவது மாதம் ரூ.844 இஎம்ஐ கட்டி இந்த போனை வாங்கிக் கொள்ள முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல் போனில் பல்வேறு அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த போனில் 6.4 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 1000 நிட்ஸ் பிரைட்னஸையும் ஆதரிக்கும் AMOLED பேனலைக் கொண்டுள்ளது. கூடுதல் நீடித்து உழைக்கும் தன்மைக்காக இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் மூலம் இயங்குகிறது. சக்திவாய்ந்த Exynos 1380 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

கேமராவை பொறுத்தவரை 50 + 12 + 5 மெகாபிக்சல்கள் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் தெளிவான, தரமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும். முன்பக்கத்தில் உள்ள 32 மெகாபிக்சல் கேமரா சிறந்த செல்ஃபி புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க உதவுகிறது. மேலும் இந்த போனில் 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 

8 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனம் நடுத்தர அளவிலான ஸ்மார்ட்போன்களின் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனும் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையிலான பட்ஜெட்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன்! இனி கேமராமேன் தேவையில்லை! செம மாஸ்!