கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மற்றும் பேட்ரி போன்ற நிறுவனங்களுடன் இதே போன்ற கூட்டணியை பவுன்ஸ் இன்பினிட்டி அமைத்து இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ் இன்பினிட்டி, நாட்டின் முன்னணி எரிபொருள் வினியோகம் செய்யும் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இரு நிறுவனங்கள் கூட்டணி மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்களில் பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் பேட்டரி மாற்றும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இரு நிறுவனங்கள் இடையேயான கூட்டணியின் கீழ், பவுன்ஸ் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-களில் பேட்டரி மாற்றும் மையங்களை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது. இந்த பணி பல கட்டங்களில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக பெங்களூரு நகரிலும், அதன் பின் மற்ற முன்னணி மெட்ரோ ஸ்டேஷன்களில் படிப்படியாக இன்ஸ்டால் செய்யப்பட இருக்கிறது.
பேட்டரி மாற்றும் மையங்கள்:
நாடு முழுக்க பத்து நகரங்களில் 3 ஆயிரம் பேட்டரி மாற்றும் மையங்களை அமைக்க பவுன்ஸ் இன்பினிட்டி முடிவு செய்து உள்ளது. புது கூட்டணி மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பேட்டரி மாற்றும் மையங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படும். முன்னதாக கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மற்றும் பேட்ரி போன்ற நிறுவனங்களுடன் இதே போன்ற கூட்டணியை பவுன்ஸ் இன்பினிட்டி அமைத்து இருக்கும் நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடனான கூட்டணி மிகப் பெரும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
“பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் பேட்டரி மாற்றும் திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் சந்தையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வருகிறது. நாட்டில் காற்று மாசு இல்லாத ஒன்றாக மாற்றுவதோடு, எங்களின் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் அதிக சவுகரியமாக ரி-பியூவல் செய்ய வைக்கும் எங்களது நோக்கத்தின் வெளிப்பாட்டை இந்த கூட்டணி எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. பவுன்ஸ் இன்பினிட்டி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையேயான கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் என நம்புகிறோம்,” என்று பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விவேகானந்த ஹல்லகரெ தெரிவித்து இருக்கிறார்.