ஏர்டெல் புது சலுகையில் 300Mbps வேக இணைய சேவை மற்றும் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்பட்டு உள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் ஜியோ ஃபைபர் உடனான போட்டியை எதிர்கொள்ள மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்த காலத்து கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ள என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.
ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய பிராட்பேண்ட் சலுகைகளின் விலை ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேக இணைய சேவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்பட்டு உள்ளது.
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள்:
ரூ. 699 பிராட்பேண்ட் சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் ரூ. 1099 பிராட்பேண்ட் சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவும், ரூ. 1599 பிராட்பேண்ட் சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தாவும் வழங்கப்படுகிறது.
இது தவிர ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையின் கீழ் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. உள்ளிட்டவைகளுக்கான சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏர்டெல் ஹைப்ரிட் டி.வி.:
ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதனுடன் ஒற்றை செட் டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏர்டெல் செட் டாப் பாக்ஸ் கட்டணம் ரூ. 2 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3.33TB டேட்டா வழங்கப்படுகிறது. சலுகைகள் மட்டும் இன்றி வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் நிறுவனம் முதல் மாதத்திற்கான வாடகை மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்குகிறது.