முக்கிய சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் சமீபகாலமாக அதிக அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போல் சமூகவலைதளங்களில் முன்னனி இடத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளது. இதில் ரீல்ஸ்கள் , ஸ்டோரீஸ்கள் புகைப்படங்களை பதிவேற்றிக் கொள்ளலாம், ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து கொள்ளலாம். நமக்கு விருப்பமானவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் சேட் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஷாப்பிங் கூட செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் திரைநட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்களும் தங்கள் வீடியோக்களையும் படங்களையும் பதிவிடுவதால், இன்ஸ்டகிராமின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Wipro Work From Home Ends: அதிரடி நடவடிக்கையால் சோகத்தில் ஐடி ஊழியர்கள்!!
இத்தனை வசதிகள் உள்ள இன்ஸ்டாகிராமில் தற்போது அதிகமான அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்படுவதாகவும், பயனர்களுக்கு நெருக்கமானவர்களின் பெயரில் இந்த மோசடி சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதாவது உங்கள் இன்ஸ்டா அக்கவுண்டில் உங்களுக்கு நெருங்கியவர்களின் கணக்கைப் போலவே, போலியான ஒரு கணக்கு உருவாக்கப்படுகிறது. பின்பு, அவர்கள் மெசேஜ் செய்வதை போன்றே உங்களிடம் மெசேஜ் செய்வார்கள்.
இதன் பிறகு, உங்களுக்கு ஒரு லிங்கை ஷேர் செய்து அதே லிங்கை அவர்களுக்கு ஃபார்வேட் செய்ய சொல்கிறார்கள். நீங்கள் காப்பி செய்து ஷேர் செய்த மறு கணமே உங்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும்.
உங்கள் பழைய ஃபோனை புதிது போல மாற்ற வேண்டுமா ? கேமர்களுக்கான சூப்பர் டிப் !
உங்களுடைய மெயில் ஐடி, போன் நம்பர் போன்ற அனைத்து தரவுகளையும் ஹேக் செய்து மாற்றி விடுவர். பின் உங்கள் அக்கவுண்ட்டை நீங்களே கையாள முடியாத வகையில் மாற்றப்படுகிறது. உங்கள் நண்பரின் அக்கவுண்டையும் இதே யுக்தியை பயன்படுத்தி ஹேக் செய்து விடுவர். இதனால் உங்கள் வங்கி கணக்கு விவரங்களும் திருடப்பட்டு பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இன்ஸ்டாவில் உங்கள் நண்பர்களே ஏதேனும் லிங்கை ஷேர் செய்து ஃபார்வேட் செய்யச் சொன்னால் கூட, அந்தக் கணக்கின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே பதில் பேச தொடங்க வேண்டும்.
உங்கள் அக்கவுண்டை ஹேக் செய்ய நீங்களே வழிவகுக்காமல் எச்சரிக்கையுடன் இருந்தால் நல்லது. மேலும், ஃபேஸ்புக்கிலும் இதுபோல் போலி கணக்குகளை வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.