Jio True 5G வேகம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

By Dinesh TGFirst Published Oct 8, 2022, 1:17 PM IST
Highlights

இந்தியாவில் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், ஜியோ நிறுவனத்தின் 5ஜி வேகம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது.  ஜியோ நிறுவனமானது 5ஜி சேவையை கல்வியில் மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாகக் கொண்டு வந்துள்ளதாக  கூறியிருந்தது.  
அதாவது, மும்பையில் உள்ள பள்ளி ஆசிரியரை மகாராஷ்டிரா,  குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மூன்று வெவ்வேறு நகரங்களில் இருக்கும் மாணவர்களுடன் இணைவதற்கு 5ஜி முக்கிய தளமாக செயல்படும் என்று கூறியிருந்தது.

இதனையடுத்து வியாழன் அன்று மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று நகரங்களில் ஜியோ 5G சேவைகளின் பீட்டா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  அப்போது  பயனர்கள் 1Gbps வரையில் (ஒரு நொடிக்கு ஒரு ஜிபி வேகம்) அதிகமான பதிவிறக்க வேகத்தைப் பெறலாம் என்று கூறப்பட்டது. 

இதுதொடர்பாக ஜியோ நிறுவனம்  கூறுகையில் “படிப்படியாக மக்கள் முழு நகரத்திலும் 5G சிக்னல்களைப் பெறத் தொடங்குவார்கள். இதற்காக பயனர்கள் தனியாக  ஜியோ சிம் வாங்கத் தேவையில்லை. வாடிக்கையாளர்களிடம் தற்போது உள்ள 4ஜி சிம் மூலமாகவே 5ஜியை அனுபவிக்கலாம். தானாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவைக்கு அவர்கள் அப்டேட் செய்யப்படுவார்கள். 

உங்களுக்கு Airtel 5G கிடைக்கவில்லையா? கொஞ்சம் இத பாருங்க..

மேலும், 5ஜி சேவைகள் தடையின்றி செயல்புரிவதற்காக அனைத்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடனும் ஜியோ இணைந்து செயல்படுகிறோம். வாடிக்கையாளர்கள் தகுதியுள்ள அனைத்து பிராண்ட் 5ஜி மொபைல்களையும் பயன்படுத்தலாம்”  என்றும் தெரிவித்தது.  ஏர்டெலுடன் ஒப்பிடுகையில், ஜியோ தனது 5ஜி சேவையை ஸ்டேண்டலோன் முறையில் கொண்டுவந்துள்ளது. இதனால், ஏர்டெல்லைக் காட்டிலும் ஜியோவில் 5ஜியின் வேகம் அதிகமாக இருக்கிறது.

உங்க ஏரியாவில் Jio Fiber இல்லையா.. வந்துவிட்டது ஜியோவின் வயர்லெஸ் 5ஜி

 ஜியோ 5ஜியைப் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜியின் வேகத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, சுமார் 1 Gbps அளவிலான வேகம் ஜியோ 5ஜி சேவையில் கிடைக்கிறது. மேலும், 5ஜிக்காக நிறுவப்பட உள்ள சிறிய ரக டவர்களின் படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!