ஜியோ நிறுவனம் ஜியோ ஏர் ஃபைபர் என்ற வயர்லெஸ் இன்டர்நெட் வசதி வழங்கும் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் இன்டர்நெட் சேவை வழங்குவதில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஜியோ ஆகும். தொடக்கத்தில் இலவச அதிவேக 4ஜி இணைய வசதியை வழங்கியது. பின்பு, ஜியோ ஃபோன், ஜியோ வைஃபை, ஜியோ ஃபைபர் என்று அடுத்தடுத்து இன்டர்நெட் சாதனங்களை அறிமுகம் செய்து, 5ஜி வரைக்கும் வந்துவிட்டது.
இந்த நிலையில், தற்போது ஜியோ ஏர் ஃபைபர் என்ற சாதனத்தை கொண்டு வந்துள்ளது. இது ஃபைபர் இணைப்புகள் இல்லாத இடங்கள், கிராமங்களில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, இந்த சாதனமானது, அருகிலுள்ள டவரில் இருந்து அதிகவேக இணையத்தை பெற்று, ஃவைபை மூலம் நமக்கு வழங்கும். இவ்வாறு காற்றில் மூலமாக இணையத்தை பெற்று வழங்குவதால், ஏர் ஃபைபர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னையில் Airtel 5G வந்துவிட்டது.. அடப்பாவிகளா இவ்வளவு தான் உங்கள் வேகமா?
ஜியோவின் சமூகவலைதள பக்கங்களிலும் ஜியோ ஏர் ஃபைபர் குறித்த அறிமுக வீடியோ விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜியோவைப் போலவே பிஎஸ்என்எல் உள்ளிட்ட நெட்வொர்க்கிலும் ஏர் ஃபைபர் உள்ளன. இருப்பினும், ஜியோவில் இருக்கும் அதிவேக இணைய வசதி, சலுகைகள் மற்ற நெட்வொர்க்குகளில் இருப்பது இல்லை.
ஜியோ வாடிக்கையாளர்கள், தங்கள் பகுதியில் ஜியோ ஃபைபர் வேண்டும் என்பவர்கள், இந்த ஜியோ ஏர்ஃபைபரை பயன்படுத்தலாம். ஃபைபரில் உள்ள அதே இணைய வேகம், இந்த ஏர் ஃபைபரிலும் இருக்கும்.
அடேங்கப்பா.. Jio Airtel 5G வேகத்தை நீங்களே பாருங்க!
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள், கட்டணங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் ஜியோ ஃபைபரைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வேகத்தில் இணையம் விரும்புகிறவர்கள் ஜியோ ஏர் ஃபைபருக்கு முன்பதிவு செய்யலாம்.