மோட்டோரோலா நிறுவனத்தின் புத்தம் புதிய மோட்டோ e32 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரெட்மி, ரியல்மிக்குப் போட்டியாக குறைந்த விலையில், அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது Moto e32 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இதில் 90Hz ரெவ்ரெஷ் ரேட், 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல், 8MP முன் கேமரா, 4GB RAM உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், 50MP பின்புற கேமரா, 2MP டெப்த் சென்சார், பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார், 10W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி ஆகியவை உள்ளன.
மேலும், IMG PowerVR GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 12nm சிப் உள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு, 1TB வரையில் மெமரி கார்டு போடும் வசதி, இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி), ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளன.
Samsung S23 Ultra Price: விரைவில் அறிமுகமாகும் ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்
இது தவிர வழக்கமான 3.5mm ஆடியோ ஜாக், சிங்கிள் ஸ்பீக்கர், FM ரேடியோ, விரல்ரேகை ஸ்கேனர் உள்ளன. 10W சார்ஜிங் வேகத்துடன் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருமுறை சார்ஜ் செய்தாலே ஒரு நாள் முழுவதும் சர்வ சாதாரணமாக போனை பயன்படுத்தலாம்.
இயல்பான அம்சங்களுடன் வந்துள்ள இந்த Moto e32 ஸ்மார்ட்போனானது மொத்தம் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.காஸ்மிக் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் ப்ளூ ஆகும். இதன் விலை ரூ. 10,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வந்துவிட்டது Moto G72.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..