Amazon Limited Offer: இப்பவே கூட வாங்கி வச்சுக்கோங்க.. இதுதான் கடைசி வாய்ப்பு!

Published : Oct 08, 2022, 11:03 AM IST
Amazon Limited Offer: இப்பவே கூட வாங்கி வச்சுக்கோங்க..  இதுதான் கடைசி வாய்ப்பு!

சுருக்கம்

அமேசானில் கிரேட் இந்தியன் சேல் விற்பனையின் முதல் நாளில் மட்டும் டிவி வகைகளின் விலை குறைந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு,தற்போது மீண்டும் ஒரு சில டிவிகளின் விலை மட்டும் நல்ல ஆஃபரில் விற்பனைக்கு வந்துள்ளது. 

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆஃபர் தொடங்கிய போது 14 ஆயிரம் மதிப்புள்ள 32 இன்ச் ரெட்மி, TCL ஸ்மார்ட் டிவி வகைகளானது வெறும் 8 ஆயிரம், 9 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வந்தது. 

14 ஆயிரம் ரூபாய் டிவி, 8 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வந்ததால், பெரும்பாலானோர் ஆர்டர் செய்தனர். குறிப்பாக ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி அதிகளவு விற்பனையானது. அடுத்த நாளே டிவிகளின் விலை சுமார் 1,500 ரூபாய் வரையில் கூடியது. 

Google Pixel 7 ஸ்மாடர்போன்களுக்கு சரியான ஆஃபர்!

காத்திருந்து ஆர்டர் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், தற்போது TCL, LG உள்ளிட்ட டிவிகளின் விலை மீண்டும் சரிந்துள்ளது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் TCL தவிர மற்ற எல்லா பிராண்டுகளும் 1 வருட உத்தரவாதம் அளிக்கிறது. TCL டிவிக்கு 2 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. 

இந்த பண்டிகை கால சீசனை விட்டால், எல்லா தயாரிப்புகளின் விலையும் எகறிவிடும். எனவே, டிவி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை எதிர்காலத்தில் வாங்கலாம் என்று நினைப்பவர்கள், இந்த ஆஃபரை பயன்படுத்தலாம். 

உங்கள் பழைய ஃபோனை புதிது போல மாற்ற வேண்டுமா ? கேமர்களுக்கான சூப்பர் டிப் !

இதற்கு முன்பு இந்த தயாரிப்புகள் எந்த விலையில் விற்கப்பட்டன என்பதை தெரிந்து கொள்ள, நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் தயாரிப்பின் பக்கத்திலுள்ள URLஐ, காப்பி செய்து https://www.pricebefore.com என்ற இணையதளத்தில் எண்டர் செய்தால் போதும். நீங்கள் விரும்பும் தயாரிப்புகளின் விலை இதற்கு முன்பு எப்படி இருந்தது,  இப்போது என்ன விலை, எவ்வளவு ரூபாய் தள்ளுபடி உள்ளது, குறைந்த விலையில் எப்போது விற்கப்பட்டது என அனைத்தும் தெரிந்துகொள்ளலாம். 

அந்த வகையில், டிவி வகைகளைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகள் இல்லாத அளவில் சரியான தள்ளுபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!
இணையத்தை கலக்கும் '67'.. டைப் செய்தாலே ஆட்டம் காணும் மொபைல்! வைரலாகும் கூகுள் ட்ரிக்!