ஐபோன்களில் 5ஜி வேலை செய்யவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் நாட்டில் முதன்முறையாக 5ஜி சேவையை அமலுக்கு கொண்டு வந்தது. நீண்ட நாட்களாக 5ஜிக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள், 5ஜி நெட்வொர்க்கை அனுபவித்து மகிழ்ந்தனர்.
இருப்பினும், எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் முதன்மையாக கருதப்படும் ஐபோன்களில் 5ஜி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதை உறுதிசெய்யும் வகையில், பல வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஐபோன்களிலும் 5ஜி சேவை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
undefined
மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் ஐபோன்களில் அதிக 5ஜி பேண்டுகள் உள்ளன. இருப்பினும் 5ஜி சேவை கிடைக்காததால், ஏர்டெல் நிறுவனத்திற்கு நேரடியாக புகார் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஏர்டெல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஏர்டெலும் ஐபோனும் இணைந்து 5ஜி சேவையை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட முனைப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஏர்டெல் தரப்பில் எந்தத்தவறும் இல்லை என்றும், ஐபோனில் 5ஜி சேவைக்கான சாப்ட்வேர் அப்டேட்டில் தான் கோளாறு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஐபோன் தரப்பில் 5ஜிக்கான மென்பொருள் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு Airtel 5G கிடைக்கவில்லையா? கொஞ்சம் இத பாருங்க..
இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் இடங்கள்:
ஏர்டெல் நிறுவனமானது சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவையை அமல்படுத்தியுள்ளது. அவை: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி
5ஜி சிம் வேண்டுமா?
5ஜி சேவையை அனுபவிப்பதற்கு தனியாக 5ஜி சிம் வாங்கத் தேவையில்லை என்று ஏர்டெல் தரப்பில் தெரிவிககப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் 4ஜி சிம் போதுமானது, அதுவே 5ஜி ஆக செயல்படும். ஸ்மார்ட்போன் செட்டிங்கிஸ் பகுதியில் 5ஜி என்று மாற்றினாலே, 5ஜி கிடைத்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
உங்க ஏரியாவில் Jio Fiber இல்லையா.. வந்துவிட்டது ஜியோவின் வயர்லெஸ் 5ஜி