இனிமேல் கார்டு எடுத்துட்டு வராதீங்க... ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு... கலக்கத்தில் பயனர்கள்..!

By Kevin Kaarki  |  First Published May 23, 2022, 4:32 PM IST

இந்திய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை தனது சர்வர்களில் இனிமேல் சேமித்து வைக்க மாட்டோம் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோகெனைசேஷன் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் வகையில்  ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை அதிரடியாக நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

இதோடு இன்-ஆப்  பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

கார்டுகளுக்கு தடை:

“ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை தனது சர்வர்களில் இனிமேல் சேமித்து வைக்க மாட்டோம் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

ஆப் சந்தா கட்டணம் மற்றும் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணத்தை ஆப்பிள் வாலெட்டில் ஏற்றி வைத்துக் கொள்ள முடியும். பயனர் அக்கவுண்டில் பணம் இருக்கும் வரை சந்தா தொடர்ச்சியாக கிடைக்கும். 

டோகெனைசேஷன்:

பேமண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கேட்வேக்கள் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 2020 வாக்கில் தடை விதித்தது. மேலும் இந்த விதிக்கு ஒப்புக் கொள்ள ஜூன் 30, 2021 வரை அவகாசம் அளித்து இருந்தது. எனினும், இந்த காலக்கெடு முதல் முறையாக ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2021 வரையும், அதன் பின் மற்றொரு முறை நீட்டித்து ஜூன் 30, 2022 வரை உத்தரவிட்டுள்ளன. 

பேடிஎம், ரேசர்பே மற்றும் போன்பெ போன்ற நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் டோகெனைசேஷன் வழிமுறைகளை வெளியிட்டு உள்ளன. இதன் மூலம் பண பரிமாற்றங்களில் எந்த இடையூறும் ஏற்படாது. 

click me!