
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டு வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். அதிவேக டெலிவரி விவகாரத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவன குழுவிற்கு தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்களின் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹைப்பர் மோடில் டெலிவரி பெறும் வீடியோக்களை ஓலா எலெக்டரிக் நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு இருக்கிறது. வீடியோவில் ஒரு வாடிக்கையாளர் நேற்று தான் பணத்தை செலுத்தினேன், இன்றே எனக்கு ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டு விட்டது.
24 மணி நேரத்தில் டெலிவரி:
“ஸ்கூட்டரை வாங்கிய 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் குழுவின் தலைசிறந்த பணி. பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகள் தங்களின் வாகனங்களை டெலிவரி செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டு வருகின்றன. மேலும் வாகனத்தை பதிவு செய்யவே அதிக நேரம் ஆகிறது. எதிர்காலம் இங்கே இருக்கிறது, இதன் அங்கமாக இருங்கள்!,” என பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
ஓலா செயலியில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கான விற்பனை தளத்தை திறந்தது. இத்துடன் ஒரு முறை சார்ஜ் செய்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 200 கிலோமீட்டர் சென்றால் கெருவான நிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக பெறலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
இலவச ஸ்கூட்டர்கள் தமிழ் நாட்டில் உள்ள பியூச்சர்ஃபேக்டரியில் இருந்து ஜூன் மாத வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. கெருவா நிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஹோலி பண்டிகையின் போது அறிமுகம் செய்தது. மேலும் இந்த நிறம் ஓலா S1 ப்ரோ வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.