ஓவியத்தில் கணேஷ் மொத்தம் 741 பண்டை தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார். ஓவியத்தை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா திகைத்து போனார்.
தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்து இருக்கும் ஓவியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை பண்டைய தமிழ் எழுத்துக்களால் வரைந்து அசத்தி இருக்கிறார். ஓவியத்தில் கணேஷ் மொத்தம் 741 பண்டை தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார். ஓவியத்தை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா திகைத்து போனார்.
மேலும் ட்விட்டரில் கணேஷ் வரைந்த ஓவியத்தை ஆனந்த் மஹிந்திரா ரி-ஷேர் செய்து இருக்கிறார். கணேஷ் பயன்படுத்தி இருக்கும் யுக்தி மிகவும் வித்தியாசமாக இருந்தது என கூறிய ஆனந்த் மஹிந்திரா கூறி இருக்கிறார். இதோடு இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் அலங்கரிக்க விரும்புவதாக ஆனந்த் மஹிந்திரா மேலும் தெரிவித்து உள்ளார்.
ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAK
ஓவியத்தை வரைந்த கணேஷிற்கு ஆனந்த் மஹிந்திரா தமிழில் தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார். அதன்படி ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.
பாராட்டு:
கணேஷ் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திரா ஓவியத்தை வரையும் போது எடுத்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் பதிவில் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா ரேசிங், மஹிந்திரா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா ரைஸ் போன்ற அக்கவுண்ட்களை டேக் செய்து இருந்தார். இதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ்-க்கு வெகுவாக பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
கணேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலர் இவரின் முயற்சிக்கு தங்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.